28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
201703011443516157 Watermelon gives skin problems SECVPF
சரும பராமரிப்பு

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி

வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. தர்பூசணி அழகுக்கு தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம்.

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி
வெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம்.

1. தர்பூசணிச் சாறு – அரை கப், கடலை மாவு – அரை கப், கஸ்தூரி மஞ்சள்தூள் – 2 தேக்கரண்டி கலந்து, சோப்புக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தி பாதம் முதல் உச்சிவரை 5 நிமிடங்கள் மிருதுவாக மசாஜ் செய்து குளிக்கவும். இது வெயிலினால் ஏற்படும் டேனை நீக்கி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

2. வெளியே சென்று வந்தால் மாசு, தூசு பட்டு முகம் கருப்படையும். இதற்கு ஓட்ஸ் பவுடர் – அரை கப், தர்பூசணிச் சாறு – ஒரு கப், பச்சைக் கற்பூரம் பவுடர் – 2 சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். இதை வெளியே செல்லும் முன் ஃபேஸ்பேக் ஆகப் போட்டுக்கொண்டு, முகம் கழுவிவிட்டுச் சென்றால், சருமத் தொல்லைகள் வராமல் தடுக்கும்.

3. 25 கிராம் வெட்டிவேர், ரோஜா – 5 பூக்களின் இதழ்கள், வேப்பந்தளிர் – 4, வெந்தயத் தூள் – 25 கிராம், பூலாங்கிழங்கு – 25 கிராம், தர்பூசணிச் சாறு – ஒரு கப் எடுத்து அரைக்கவும். வியர்வை அதிகம் வெளியேறும் பகுதிகளில் தடவி, காய்ந்ததும் குளிக்கவும். இதனால் வியர்வையினால் வரும் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

4. வெள்ளரிக்காய் – 2 பீஸ், தர்பூசணி – 2 பீஸ், ஒரு தேக்கரண்டி – பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, கண்களைச் சுற்றி பேக் போடவும். 10 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுக்கவும். பிறகு கழுவினால், வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கி, புத்துணர்வை உணரலாம்.

5. தர்பூசணிச் சாறு – அரை கப், எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி, தக்காளி – கால் கப் எடுத்துக் கலக்கவும். சிறிய பருத்தித் துணியில் அதை நனைத்தெடுத்து கை, கால், உடலில் ஒற்றியெடுத்து, பின்னர் குளிக்கவும். இது உடல் எரிச்சலை நீக்கும். தர்பூசணி விதைகளை அரைத்து, பொடி செய்து, கடலை மாவுடன் கலந்து வைத்துக்கொண்டு முகம் கழுவ, முக எரிச்சல் நீங்கி குளுமை கிடைக்கும்.

6. இளநீர் – கால் கப், தர்பூசணிச் சாறு – கால் கப், கஸ்தூரி மஞ்சள் – 4 தேக்கரண்டி எடுத்துக் கலந்து கால், முழங்கை, கழுத்துப் பகுதிகளில் பூசிக் கழுவினால் வெயில், வியர்வையால் கருப்படைவதைத் தவிர்க்கலாம்.

7. புதினா இலைப் பொடியுடன் தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் பேக் போடவும். பின்னர் ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி முகத்தில் ஒற்றியெடுக்க, பரு, கரும்புள்ளிகள் நீங்கும்.

அதேபோல் கடலை மாவு – அரை கப், வெட்டிவேர் – 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் – ஒரு தேக்கரண்டி, தர்பூசணி சாறு – கால் கப் எடுத்துக் கலந்து தடவினால், வெயில் கட்டிகள் வராது.

8. கால் கப் – நுங்குச் சாறு, கால் கப் – தர்பூசணிச் சாறு, கால் கப் – பார்லி பொடி எடுத்து கலந்து உடல் முழுவதும் மசாஜ் கொடுங்கள். பின்னர் அருவியிலோ ஆற்றிலோ குளித்துப் பாருங்கள்… உடல் அவ்வளவு குளிர்ச்சி பெறும்!201703011443516157 Watermelon gives skin problems SECVPF

Related posts

மகளிருக்கான இலையுதிர் கால தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க

nathan

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

பெண்கள் ஏன் காலில் கருப்புக் கயிறு அணிகிறார்கள் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

சன் ஸ்கிரீன்

nathan

பெண்களே உங்க அக்குள் கருப்பா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

nathan

பெண்களின் அழகை கெடுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கும் எண்ணெய்கள்

nathan