அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கழுத்தில் கறுமை மறைய…

பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை படர்ந்து காணப்படும். கனமான செயின் அணியும் போது அதனுடன் வியர்வை சேருவதாலும், தலையில் தேய்க்கும் எண்ணெய் கழுத்தின் பிற்பகுதியில் படிந்து, அழுக்கும் சேருவதாலும் கழுத்துப் பகுதி கறுப்பாக மாறுகிறது. கறுமை நீங்க சில டிப்ஸ்…

* எலுமிச்சை சாறில், தக்காளியை நனைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள இடங்களில் தேய்த்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* உருளைக்கிழங்கு சாறு, தக்காளி சாறு, சிறிது நுங்கு ஆகியவற்றுடன் கொண்டைகடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் தேய்த்து வர கறுமை நீங்கும்.

* கடுகு எண்ணெயை கழுத்தில் தேய்த்து சில மணி நேரங்கள் ஊறவிட்ட பின், வெதுவெதுப்பான நீரில் பஞ்சை நனைத்து துடைத்து வர கறுமை நீங்கும்.

* கோதுமை மாவு, பயத்தமாவு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். சில நாட்களில் கறுமை நீங்கும்.

* எலுமிச்சை சாறு மற்றும் பாலுடன் சிறிதளவு பார்லி பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்த வந்தால், நாளடைவில் கறுமை மறையும். இதில், பார்லி பொடி கலக்காமல் எலுமிச்சை சாறு மற்றும் பால் மட்டும் கலந்தும் தேய்க்கலாம்.

* பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து கறுமை உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், சில நாட்களில் கறுமை மறையும்.

Wana Get Rid of Dark Neck Follow My Beauty Tips to Solve This Problem 5 e1463972466809

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button