24.4 C
Chennai
Tuesday, Jan 14, 2025
24 1440416540 3 potato
ஆரோக்கிய உணவு

கண்டிப்பாக ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

இன்றைய நவீன உலகில் அனைவரது வீட்டிலும் மிக்ஸி, கிரைண்டர் போல ஃப்ரிட்ஜ் உள்ளது. இப்படி ஃப்ரிட்ஜ் உள்ள வீடுகளில் பார்த்தால், அனைத்து பொருட்களும் ஃப்ரிட்ஜில் தான் இருக்கும். அதிலும் கடைக்கு மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி, பழங்கள் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், அந்த பொருட்கள் பாழாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைப்பார்கள்.

நீங்கள் அப்படி செய்பவராயின் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இக்கட்ரையில் ஃப்ரிட்ஜில் எந்த பொருட்களையெல்லாம் வைக்கக்கூடாது என்றும், அப்படி வைத்தால் என்ன ஆகும் என்றும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பார்த்து, உங்களுக்கு உபயோகமாக இருந்ததா என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காபி தூள் எக்காரணம் கொண்டும் காபித் தூளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், குளிர் வெப்பநிலையால் காபி தூளின் சுவை மாறிவிடும். எனவே காபித் தூளை எப்போதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அறை வெப்பநிலையிலேயே வைத்துப் பராமரிக்க வேண்டும்.

தக்காளி உங்களுக்கு தக்காளி வேகமாக பழுக்க வேண்டுமானால், அதனை ஃப்ரிட்ஜில் வையுங்கள். ஆனால் ஏற்கனவே பழுத்த தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால், தக்காளி விரைவில் பாழாகும். எனவே தக்காளி நீண்ட நாட்கள் வர வேண்டுமாயின், வெளியே வைத்து பராமரியுங்கள்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை எப்போதும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அவற்றை எப்போதுமே வறட்சியான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.

வெண்ணெய் பழம்/அவகேடோ பட்டர் ஃபுரூட் என்னும் வெண்ணெய் பழத்தை பச்சையாக இருக்கும் போது எப்போதுமே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. வேண்டுமெனில் நன்கு கனிந்த வெண்ணெய் பழத்தை குளிர் வெப்பநிலையில் பராமரிக்கலாம்.

வெங்காயம் வெங்காயம் எப்போதுமே ஈரப்பசை இல்லாத மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து தான் பராமரிக்க வேண்டும். ஒருவேளை வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால், சீக்கிரம் அழுகிவிடும்.

பிரட் பலரும் பிரட்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் பிரட்டை நன்கு கவர் சுற்றி, வெளியே வைத்தால் தான் பூஞ்சைகள் படர்வதைத் தடுக்கலாம்.

எண்ணெய் எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்தால், அது பிசுபிசுவென்றும், கலங்கலாகவும் தான் இருக்கும். மேலும் எண்ணெய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால், அறை வெப்பநிலையில் தான் பராமரிக்க வேண்டும்.

தேன் தேனை ஃப்ரிட்ஜில் வைத்தால், அது கெட்டியாகவும், கடினமாகவும், திரித்திரியாகவும் தான் வரும். மேலும் ஃப்ரிட்ஜில் வைத்தால், தேனில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் நீங்கிவிடும். பின் இவற்றை உட்கொள்வதே வீணாகிவிடும்.

பூண்டு பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால், அதில் உள்ள நறுமணம் குறைந்துவிடுவதோடு, குளிர் வெப்பநிலை பூண்டில் பூஞ்சைகள் உருவாக வழிவகுக்கும்.

மசாலாப் பொருட்கள் அரைத்துப் பொடி செய்து வைத்துள்ள மசாலா பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. மேலும் மசாலா பொடி நீண்ட நாட்கள் நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமானால், அறை வெப்பநிலையில், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு தான் பராமரிக்க வேண்டும்.24 1440416540 3 potato

Related posts

சுவையான வெள்ளரிக்காய் சட்னி

nathan

சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ்

nathan

இதை முயன்று பாருங்கள் பன்னீர் பிரைடு ரைஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!

nathan

சூப்பர் டிப்ஸ்! எப்பவும் அழகா இருக்கணுமா? காய்ச்சாத பாலை இப்படி பயன்படுத்தினாலே போதும் !

nathan

தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

nathan

காலை எழுந்த பின் ஒரு டம்ளர் வேப்பில்லை சாறு குடித்தால் போதும்! தெரிஞ்சிக்கங்க…

nathan