சிற்றுண்டி வகைகள்

சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலா

ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இன்று இந்த ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலா
தேவையான பொருட்கள் :

சிகப்பு கிட்னி பீன்ஸ்(ராஜ்மா பீன்ஸ் ) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 3
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 /2 தேக்கரண்டி
இஞ்சி – பூண்டு – 2 ஸ்பூன்

தாளிக்க :

சீரகம் – 1/2 தேக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
பிரியாணி இலை – 1
நெய் – தேவைக்கு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை :

* ராஜ்மா பயிரை 8 மணி நேரம் வரை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* தக்காளியை சுடு நீரில் ஊற வைத்து தோலுரித்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.

* அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ராஜ்மா, தேவையான அளவு தண்ணீர், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாதூள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வேக வைக்கவும்.

* திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.201703090904088564 how to make rajma masala SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button