சரும பராமரிப்பு

சருமத்தில் சேரும் கறைகளை போக்கும் கடலை மாவு

Tweet அ- அ+
சருமத்தி பொலிவடைய செய்வதிலும், சருமத்தில் உள்ள அழுக்கை போக்குவதலும் கடலைமாவு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று கடலை மாவை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

சருமத்தில் சேரும் கறைகளை போக்கும் கடலை மாவு
அன்றாட காற்று மாசுக்களால் முகத்தில் படியும் கசடுகளை, கறைகளை அகற்ற கடலை மாவு சிறந்ததாக உள்ளது. கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும்.

அதுபோல் கடலை மாவுடன் பாதாம் பவுடர் மற்றும் எலுமிச்சை கலந்து குழைத்து முகம் முழுவதும் பூசி 30 நிமிடம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதன் மூலம் முகம் பிரகாசமாக தோன்றுவதுடன் சரும ஆரோக்கியமும் மேம்படும்.

கடலை மாவுடன் சந்தனம், ரோஸ் வாட்டர், தேன் கலந்து முகப்பூச்சு செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறுவதுடன் சருமம் மென்மையும் வழுவழுப்பும் பெறும்.

துளசி இலைகளை நன்கு அரைத்து அதனை முகத்தில் பூசி, காய்ந்தவுடன் கழுவி விடவும். இதன் மூலம் முகப்பரு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், முகச்சருமத்திற்கு போஷாக்கும் கிடைக்கின்றது. இயற்கையில் சாதாரணமாய் கிடைக்கும் பொருட்கள் மூலம் பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்தி கொள்ள முடியும். 201703090823525457 gram flour dirt out of the skin SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button