33.4 C
Chennai
Sunday, May 11, 2025
201703181114365343 how to make samai rice kara puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சாமை காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி மாவு – 500 கிராம்,
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி,
கடுகு – சிறிதளவு,
உளுந்து – ஒரு தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
சீரகம் – ஒரு தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
தக்காளி – 1,
சின்ன வெங்காயம் – 250 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

* கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

* பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

பலன்கள்:

நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.201703181114365343 how to make samai rice kara puttu SECVPF

Related posts

ஓமவல்லி இலை பஜ்ஜி

nathan

சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

சுவையான மீன் புட்டு செய்வது எப்படி

nathan

கார்ன் சீஸ் டோஸ்ட்

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan

ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா…?

nathan

சுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி – கார்ன்ஃப்ளேக்ஸ் வெங்காய பஜ்ஜி (வீடியோ இணைப்புடன்)

nathan

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

nathan