ஆரோக்கிய உணவு

வயிற்று கோளாறுகளை குணமாக்கும் புதினா

புதினாவை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு.

வயிற்று கோளாறுகளை குணமாக்கும் புதினா

புதினா கீரையை மணத்துக்காவும், சுவைக்காகவும் உணவுப் பொருட்களில் சேர்ப்பதுண்டு. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

புதினா சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது, இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு.

புதினா இலைகளை சுத்தம் செய்து நைத்து நீர் விட்டு நீரை பாதியளவு சுண்டக்காய வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, சிறு குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்தால் இந்தப் புதினா கஷாயத்தில் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.mint healing Stomach problem

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button