கை பராமரிப்பு

கைகளில் உள்ள சுருக்கங்களை 15 நிமிடங்களில் மறையச் செய்யும் அற்புத வழிகள்!

ஒவ்வொரு பெண்ணும் தங்களது அழகின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். மேலும் எப்போதும் இளமையுடன் இருக்கவும் விரும்புவார்கள். அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை; கை, கால்களும் தான் உள்ளது.

ஒருவருக்கு 40 வயது வரை கூட முகத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்கலாம். ஆனால் கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

இக்கட்டுரையில் கையில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கை, கால்களுக்கு பயன்படுத்தினால், கை, கால்களில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிப்பதோடு, சரும சுருக்கங்களையும் போக்கும். மேலும் உருளைக்கிழங்கு சருமத்தை மென்மையாக்கும்.

பயன்படுத்தும் முறை: உருளைக்கிழங்கை வேக அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

முட்டை சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை முட்டை மேம்படுத்தும். மேலும் முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

பயன்படுத்தும் முறை: முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் தனியே பிரித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

ரோஸ்ஹிப் ஆயில் இந்த ரோஸ்ஹிப் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும். அதற்கு இந்த எண்ணெயை தினமும் கைகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

hand wrinkles 16 1479290302

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button