சிற்றுண்டி வகைகள்

பசியைத் தூண்டும் சீரக துவையல்

இந்த சீரக துவையல் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பசியைத் தூண்டும் சீரக துவையல்
தேவையான பொருட்கள் :

சீரகம் – கால் கப்,
இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
சின்ன வெங்காயம் – 10,
புளி – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 5,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வதக்கி ஆற விடவும்.

* ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

* விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.

* சூப்பரான சீரக துவையல் ரெடி.

* இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். 201703201304072966 Cumin seeds thuvaiyal jeera thuvaiyal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button