அழகு குறிப்புகள்முகப்பரு

தழும்புகள் மறைய….

Acne-Scars-Naturally copyமுகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி, நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதேபோல், உடம்பில் தழும்புகள் இருந்தால் அவரை இலை சாறு பூசலாம். தழும்புகள் மறைந்துவிடும்.

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க, இளம் கொத்துமல்லி இலைகளை எடுத்து சாறு பிழிந்து, அதில் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவிப்பாருங்கள். தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி உலரவிட்டு பின் கழுவினால் முடி உரிர்ந்து விடும்.

தூக்கமின்மையால் சிலருக்கு அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு அடிக்கடி ஏற்பட்டால் நந்தியாவட்டை பூவால் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனே சரியாகிவிடும்.

முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி சீயக்காயுடன் சேர்த்து அரைத்துத் தேய்த்து குளித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

பெண்களுக்குப் பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும். அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.

Related posts

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

ஷிப்ட் முறையில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போகுமா?

nathan

உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசி யார்?

nathan

அழகா… ஆரோக்கியமா

nathan

இவ்வாறு கருப்பாக உள்ள கழுத்து பகுதியில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.

nathan

இதை நீங்களே பாருங்க.! தன் நிலத்தை சுற்றி சன்னி லியோனின் பிகினி புகைப்பட பேனர்களை வைத்த விவசாயி

nathan

skin care tips, தேமல் பிரச்னைக்கு தீர்வை அளிக்கும் இயற்கை பொருட்கள்

nathan

ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..

sangika

தேவையற்ற ரோமங்களை வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

nathan