சிற்றுண்டி வகைகள்

யுகாதி ஸ்பெஷல் பச்சடி செய்வது எப்படி

யுகாதி தினத்தன்று, யுகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும். இந்த பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

யுகாதி ஸ்பெஷல் பச்சடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மாங்காய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
வேப்பம்பூ – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1 கப் (தட்டியது)
தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்
புளி சாறு – 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 3 கப்

செய்முறை :

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

* மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

* சூப்பரான யுகாதி ஸ்பெஷல் பச்சடி ரெடி.201703281409386551 how to make ugadi special pachadi SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button