மருத்துவ குறிப்பு

மெத்தையை விட கட்டாந்தரையில் படுப்பது ஏன் ஆரோக்கியமானது என்று தெரியுமா?

என்ன தான் மெத்தையில் படுத்து நல்ல தூக்கத்தைப் பெற்றாலும், தரையில் படுப்பதற்கு இணையாகாது. ஏனெனில் கட்டாந்தரையில் ஒரு துணியை விரித்து படுப்பதால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் பெற முடியும். அதிலும் சரியான நிலையில் தூங்கினால், இருமடங்கு நன்மைகளைப் பெற முடியும். குறிப்பாக தற்போது பலரும் அவஸ்தைப்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மன நிம்மதி கிடைக்கும்

அக்காலத்தில் நம் முன்னோர்கள் கட்டாந்தரையில் உறங்கியதால் தான் என்னவோ, அவர்கள் எவ்வித ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கவில்லை என்றும் கூறலாம். கட்டாந்தரையில் படுப்பதன் மூலம் பெறும் நன்மைகளுக்கு காரணம், புவிஈர்ப்பு சக்தி தான். சரி, இப்போது தரையில் படுப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போமா!!!

முதுகு, இடுப்பு வலி உடல்நல நிபுணர்கள் பலரும் முதுகு மற்றும் இடுப்பு வலி வராமல் இருப்பதற்கு, கட்டாந்தரையில் நேராக படுக்க பரிந்துரைக்கிறார்கள். எனவே உங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால், மெத்தையில் படுப்பதற்கு பதிலாக தரையில் படுங்கள்.

தூக்கமின்மை சில ஆய்வுகள் தூக்கமின்மையினால் கஷ்டப்படுபவர்கள், கட்டாந்தரையில் துணியை விரித்து படுத்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்று கூறுகிறது.

கழுத்து வலி கழுத்து வலியுள்ளவர்கள், தரையில் தலையணை இல்லாமல் நேராக படுத்து வந்தால், கழுத்து வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி தோள்பட்டை வலி இருந்தாலும் குணமாகும்.

இரத்த ஓட்டம் சீராகும் கட்டாந்தரையில் நேராக படுத்து உறங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று, உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் உடலுறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைத்து, இடையூறின்றி உறுப்புக்கள் இயங்கும்.

ரிலாக்ஸ்
மெத்தையில் படுக்கும் போது, உடலானது ஒருவித இறுக்கத்துடன் இருக்கும். ஆனால் தரையில் துணியை விரித்துப் படுத்தால், உடல் முழுவதும் நன்கு ரிலாக்ஸ் ஆகும். எனவே மெத்தையில் படுப்பதை தவிர்த்து, தரையில் படுத்து உறங்க ஆரம்பியுங்கள்.

அலுப்பு சிலருக்கு நல்ல மென்மையான மெத்தையில் படுத்தும் அலுப்பு நீங்காமல் இருக்கும். அதுவே தரையில் படுத்தால், நிச்சயம் அலுப்பு உடனே நீங்கிவிடும்.

நிலையில் பிரச்சனை பலரும் நாள் முழுவதும் தவறான நிலையில் இருந்து, அதே நிலையில் தான் மெத்தையில் படுக்கும் போது மேற்கொள்வோம். அப்படியே இருந்தால், பிரச்சனைகள் இன்னும் மோசமாகும். ஆனால் தரையில் படுக்கும் போது, நீங்களே உங்களின் நிலையை மாற்றிக் கொண்டு, மிகுந்த களைப்பில் நேராக படுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

குறிப்பு முக்கியமாக தரையில் படுத்தால், படுத்த உடனேயே உறங்கிவிடலாம். மேலும் புவிஈர்ப்பு சக்தியினால், உடலை அழுத்தி மிகுந்த வலி மற்றும் களைப்பிற்கு உள்ளாக்கியவை உறிஞ்சி வெளியேற்றப்பட்டு, மனதை சந்தோஷமாகவும், குதூகலமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.

02 1441172213 4 sleep

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button