சிற்றுண்டி வகைகள்

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த தயிர் சேமியாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா
தேவையான பொருட்கள் :

சேமியா – அரை கப்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
பால் – அரை கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
பச்சை மிளகாய் – 1,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கேரட் – 1,
முந்திரிப்பருப்பு – 5,
உலர் திராட்சை – 10,
இஞ்சி – சிறிய துண்டு.

செய்முறை :

* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்தெடுக்கவும். பின் நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.

* அடுத்து அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்த பின் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சேமியாவில் சேர்க்கவும்.

* சேமியாவை நன்றாக கிளறிய பின்னர் அதில் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்த பின் அடுப்பை அணைக்கவும்

* கடைசியாக கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், முந்திரி, உலர்திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

* சூப்பரான தயிர் சேமியா ரெடி.

* இதை குளிரவைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். (சற்று கெட்டியாக இருந்தால் மேலும் சற்று புளிப்பில்லாத தயிரைக் கடைந்துவிட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்). 201703311316217354 evening tiffin curd semiya SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button