மருத்துவ குறிப்பு

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

“ஒரு விஷயம் நீங்க கவனிச்சிருக்கீங்களா? சிலர் தன்னுடைய டென்ஷனெல்லாம் அடுத்தவரிடம் கொட்ட பார்ப்பார்கள்… அடுத்தவங்கக்கிட்ட கொட்டிட்டாலோ, ‘அப்பாடா என் பாரத்தை இறக்கி வச்சாச்சு’ என்று அடுத்த வேலையை கவனிக்கப் போய்டுவாங்க… இப்படித்தான் எனக்கும் ஏற்பட்டது” என்று பெங்களூருவில் வசிக்கும் ராதா நரசிம்மன் தான் சந்தித்த பெண்மணி ஒருவரைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

“எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் தன் உடல் நிலை உபாதை, தன் வீட்டு கஷ்டங்கள், பண கஷ்டங்கள் என எப்போதும் என்னைப் பார்த்தால் புலம்ப ஆரம்பித்து விடுவார். அவரைப் பார்த்ததும் எனக்கும் சோகம் தொற்றிக் கொள்ளும். அவர் பேச்சை கேட்டதும் அன்று முழுவதும் நான் ‘மூட் அவுட்’ ஆகி விடுவேன்… ஐயோ பாவம் என இரக்கப்பட்டு பண உதவி, மன ஆறுதல் கூறுவதும் எனக்கு பழக்கமாகிவிட்டது. நாங்கள் வீடு மாறிவந்ததும் ஒரு மாதமாக அவரை பார்க்க முடியவில்லை. பிறகு அவர் நன்றாக இருப்பதாக என் மற்றொரு தோழி மூலம் அறிந்து மகிழ்ந்தேன்.

மற்றொரு நாள் கடைவீதியில் அவரை தொலைவில் பார்த்தேன். நம்பவே முடியலை. சுறுசுறுப்பாக ஓடியாடி பொருட்களை வாங்கி, தன் கணவருடன் சிரித்து பேசியபடி இருந்தார். நான் சந்தோஷத்துடன் ஓடிப்போய் “ஹலோ, எப்படி இருக்கீங்க?” என்றதும் சட்டென அவர் முகம் மாறியது.”அதை ஏன் கேட்கற ராதா… ரெண்டு நாளா கால் மூட்டுவலி, தலை சுற்றல், இந்த மாசம் என் பிள்ளை பணமும் அனுப்பலை, நோயும், கஷ்டமும்
என் நிழல்போல் தொடருது” என்றார்!!

எனக்கோ பயங்கர கோபம் ‘ச்சே’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட மனிதர்கள்… போலியான பேச்சு, நடிப்பு… தன்
கஷ்டங்களை பெரிதாக்கி, மற்றவர் மேல் பாரத்தை சுமத்தி, அவர்களையும் கஷ்டப்படுத்தி, இதில் என்ன சுகம்? தன் கஷ்டங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற நபர்கள் ஏன் தங்கள் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து
கொள்ளத் தயங்குகிறார்கள்? உறவுகளில், நண்பர்களில் இப்படிப்பட்ட பலபேர்களை நீங்களும் சந்தித்து இருப்பீர்கள்.

இப்போதெல்லாம் இதுபோன்று பேசுபவர்களை பார்த்தும் பார்க்காததுபோல் போய்விடுகிறேன். ஒரு நாள் என் தோழிகளிடம் இதைப் பற்றி சொல்லும்போது…"உனக்காவது யாரோ ஒரு தோழிதான் இப்படி பேசுகிறார்… என் சொந்த அக்காவே என்னை பார்த்ததும் இப்படித்தான் புலம்பறா” என்றாள் ஒருத்தி… எனக்கு தூக்கி வாரிப்போட்டது… மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். இருப்பதை உண்மையாக கூறி, நடிக்காமல் இயல்பாக இருந்தால் என்ன?ld45897

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button