முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை முற்றிலும் மறைக்கும் ஓர் ஃபேஸ் மாஸ்க்!

சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள் போன்றவை முக அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும். இதனைப் போக்க பல முயற்சிகளையும் எடுத்திருப்பார்கள். இருப்பினும் முகத்தில் பருக்களால் வந்த தழும்புகள் நீங்காமல் இருக்கும்.

ஆனால் இப்பிரச்சனைக்கு ஓர் எளிய தீர்வு நம் சமையலறையில் உள்ளது. அது தான் மிளகு. பலரும் மிளகை முகத்தைக் கொண்டு மாஸ்க் போடுவதா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மிளகு மாஸ்க் ஓர் நல்ல பலனைத் தரும்.

சரி, இப்போது முக அழகை அதிகரிக்க மிளகைக் கொண்டு எப்படி மாஸ்க் தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.

படி #1 முதலில் 1/2 டீஸ்பூன் மிளகை எடுத்துக் கொண்டு, அதை பொடி செய்து கொள்ள வேண்டும்.

படி #2
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரைப் போட்டு, ஸ்பூன் கொண்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

படி #3 பின் அதில் மிளகுப் பொடி மற்றும் தேன் சேர்த்து நன்க கலந்து கொள்ள வேண்டும். அதோடு சில துளிகள் பாதாம் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

படி #4 பின்பு முகத்தை நீரால் நன்கு சுத்தமாக கழுவி, துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும்.

படி #5 பிறகு கலந்து வைத்துள்ள மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக தண்ணீர் தெளித்து ஸ்கரப் செய்து, முதலில் வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

படி #6 இறுதியில் முகத்தை நன்கு துணியால் துடைத்துவிட்டு, பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்தி, லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

குறிப்பு இந்த மிளகு மாஸ்க்கை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை முகத்திற்கு போட்டு வந்தால், சருமம் பளிச்சென்று இருக்கும். முக்கியமாக மிளகு மாஸ்க்கைப் போடும் போது லேசாக எரிச்சல் இருப்பது சாதாரணம். ஆனால் அந்த எரிச்சலே கடுமையாக இருந்தால், உடனே முகத்தைக் கழுவிட வேண்டும். மேலும் இந்த மாஸ்க்கை அவர்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டாம்.

30 1480503305 4 face wash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button