சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்
தேவையான பொருள்கள் :

முழு ராகி – 1 கப் or ராகி மாவு 1 ½ கப்
பச்சரிசி – 1/2 கப்
இட்லி அரிசி – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/ 4 கப்
அவல் – 1/2 கப்
உளுந்து – 1/4 கப்
உப்பு – சிறிது

செய்முறை :

* ஊற வைத்த பச்சரிசி, இட்லி அரிசி, தேங்காய் துருவல், அவல், முழு ராகி or ராகி மாவு ஆகியவற்றை முதல் நாளே அரைத்துக் கொள்ளுங்கள். முழு ராகி இல்லாவிடில், ராகி மாவை அரிசி உடன் சேர்த்து அரைத்து புளிக்க வைக்க வேண்டும். அரிசி மற்ற பொருகள் அரைத்த பின் ராகி மாவாக தான் இருக்கிறது கலந்து விடலாம் என்று நினைக்காமல், மிக்ஸியில் அரிசி உடன் ராகி மாவு போட்டு அரைக்க வேண்டும்.

* அடுத்த நாள் காலையில், தண்ணீர் விட்டுத் தோசை மாவு போலக் கரைத்துக் கொள்ளுங்கள்.

* ஆப்பச் சட்டியை அடுப்பில் வைக்கவும். ஒரு கரண்டி மாவை எடுத்து, அதில் ஊற்றவும். சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். உடனே சட்டியை மூடி, அளவாகத் தீயை எரிய விட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆப்பம் வெந்தவுடன் எடுக்கவும்.

* தேங்காய்ப் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து, ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடவும்.

* தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகக் கருப்பு சுண்டல் குருமா சேர்த்துக் சாப்பிட நன்றாக இருக்கிறது

* ராகி ஆப்பம் தேங்காய் பால் உடன் சாப்பிடுவதை விட கருப்பு கொண்டக்கடலை குருமா சாப்பிட அருமையாக இருக்கிறது.201704070916065129 ragi appam. L styvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button