29 1480396438 step5
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தலை தடுத்து, நீளமான கூந்தல் பெற துளசியை எப்படி உபயோகிக்கலாம்?

துளசி உச்சந் தலையை சீராக்குகின்றது. துளசியில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ, மற்றும் கே உள்ளது. அதனுடன் இதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள்,

உங்களின் சேதமடைந்த மயிர்க்கால்களை சீரமைத்து வேரிலிருந்து முடி வளர்வதை ஊக்குவிக்கின்றது. அதன் காரணமாக முடி உதிர்வது தடுக்கப்படுகின்றது.

இதைத் தவிர்த்து துளசியில் உள்ள எதிர் பாக்டீரியா, மற்றும் எதிர் பூஞ்சை விசைகள், உச்சந்தலையில் உள்ள அசுத்தங்களை சுத்தமாகின்றன.

இதன் காரணமாக தலையில் உள்ள பொடுகு பிரச்சனை நீங்கி தலையின் pH மதிப்பு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் உச்சந்தலையின் பாக்டீரியா மற்றும் பூஞ்சை பிரச்சனையும் தீர்ந்து விடுகின்றது.

உங்களுக்கு உதவுவதற்காக துளசியை உபயோகிக்கும் வழிமுறைகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பற்றி

செய்முறை :
ஒரு கை நிறைய துளசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீரில் நன்கு அலசி, அதிலுள்ள தூசி மற்றும் அசுத்தங்களை நீக்கி விடுங்கள்.
அதன் பிறகு அந்த துளசியை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய விடுங்கள். துளசியில் உள்ள ஈரப்பதம் உலர்ந்த பின்னர் அதை இடித்து பொடியாக மாற்றவும் இப்பொழுது துளசி பொடி ரெடி.

புதிதாக அரைக்கப்பட்ட துளசி பொடி 1 தேக்கரண்டி, மற்றும் நெல்லிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, ஒரு மென்மையான பேஸ்ட் ஒன்றை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடுங்கள்.

காலையில், அந்த பேஸ்டை எடுத்து அது மென்மையாக மாறும் வரை, ஒரு குச்சியால் நன்கு கலக்கவும். அதன் பின்னர் அதனுடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில், 5 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய், மற்றும் 5 சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவற்றை கலக்கவும். இவை அனைத்தும் நன்கு சேரும் வரை நன்கு கலக்கவும்.

அனைத்துவிதமான முடிச்சு மற்றும் சிக்கல்களை அகற்றும் விதமாக அகன்ற பற்களுடைய சீப்பு கொண்டு உங்களின் தலைமுடியை சீவவும். உங்களின் முடி உடைவதை தவிர்க்க உங்கள் முடியை சிறிய பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவின் மையத்தில் இருந்து மெதுவாக சீவவும்.

மூலிகை கலவையை எளிதாக தடவ தலைமுடியை சற்று ஈரப்படுத்தவும். அதன் பின்னர் உங்களின் தலைமுடியை சிறிய பிரிவுகளாக பிரித்து துளசி மூலிகையை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவவும்.

இரத்த ஓட்டத்தை தூண்டும் விதமாக சுமார் 5 நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையை நன்கு மசாஜ் செய்யவும். முடியை தளர்வாக இழுத்து கட்டி விடுங்கள். அதன் பின்னர் உங்களின் முடியை ஒரு ஷவர் கேப்பினால் மறைத்து விடுங்கள்.

உங்கள் உச்சந்தலை இந்த மூலிகையில் உள்ள ஊட்டச்சத்துக்களை நன்கு உறிஞ்சும் விதமாக ஒரு மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின்னர், ஒரு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை சுத்தப்படுத்துங்கள், அதன் பின்னர் ஒரு பொருத்தமான கண்டிஷனர் கொண்டு தலை முடியை அலசுங்கள். தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க குறைந்தது மாதத்திற்கு இரண்டு முறை இந்த மூலிகை கலவையை பயன்படுத்தவும். உங்களிடம் தலை முடி சம்பந்தப்பட தனிப்பட்ட ப்ரத்யேக குறிப்புகள் ஏதேனும் இருந்தால் அதை எங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.

29 1480396438 step5

Related posts

கூந்தல்

nathan

பூண்டை இப்படி யூஸ் பண்ணுனீங்கனா… முடி கொட்டுறது நின்னு…

nathan

கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கும் வழிகள்

nathan

சூப்பர் டிப்ஸ்… பொடுகுத் தொல்லையை நிரந்தரமாக போக்க ஷாம்புவுடன் தேங்காய்ப்பாலை இப்படி தேய்ங்க…

nathan

கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள!….

nathan

உங்கள் முடியை அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்றி ஈரப்பதத்துடன் வைத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

nathan

கருமையான நெடுங்கூந்தல் கொண்ட பெண்கள் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்களாம்!

nathan

உங்க தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan