முகப் பராமரிப்பு

சுருக்கம் வேண்டாம்; பளபளப்பு வேணும்!

வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ.

சோப்பின் பயன்பாடு:
சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். பேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

மேக்-அப் போடும் முறை:
மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

ஆரோக்கியமான கூந்தல் பெற:
இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும். மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

கைகள் பராமரிப்பு:
இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.
surukm

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button