சைவம்

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி

காய்கறிகளை வைத்து செய்யும் இந்த ஹைதராபாத் வெஜ் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கப்
தயிர் – முக்கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – அரை டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
கேரட், உருளைகிழங்கு, பட்டாணி கலவை – அரை கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க :

பச்சை மிளகாய் – மூன்று
சின்ன வெங்காயம் – ஐந்து
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
புதினா – ஒரு கைப்பிடி
முந்திரி – நான்கு
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று

செய்முறை :

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக் கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து கேரட், உருளைகிழங்கு, பட்டாணி போட்டு வதக்கவும்.

* காய்கறிகள் சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.

* அடுத்து அதில் பாசுமதி அரிசி, தயிர், உப்பு, தண்ணீர் ஒன்றரை கப் ஊற்றி கொதி வந்ததும மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி ரெடி. 201704121258394111 how to make Hyderabad Veg Biryani SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button