ஆரோக்கிய உணவு

சிறுநீர் பாதையை சீராக்கும் உணவுகள்

காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த இயற்கை உணவுகள், உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுத்தன. ஆனால், சமீப காலமாக, மேற்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் பாக்கெட் உணவுகள், ஜங்க் புட் எனும் நொறுக்குத் தீனிகள், உடலுக்கு கெடுதலை விளைவிக்கின்றன.


சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு உணவும் ஒரு முக்கிய காரணம். நோய் ஏற்படாமல் இருக்கவும், நோய் ஏற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும், சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்; சில உணவுகளை தவிர்த்தாலே போதும். நோய் தொற்று தடுக்கும் உணவுகள்:
கேரட்: இங்கிலீஷ் காய்கறிகளில், கேரட் முக்கிய இடத்தை வகிக்கிறது. இது தினமும் சாப்பிட வேண்டிய காய்கறி. சிறுநீர் பாதை தொற்றுகளை துரத்தும் குணம் கொண்டது. தங்கத்தின் தரத்தை காரட்டில் கூறுவர். அதுபோல், காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றவை. கேரட் உடல்நலத்தை மேம்
படுத்தும் திறன் கொண்டது.
தயிர்: இது பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டது. சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க
உதவும்.
முள்ளங்கி: மண்ணில் விளையும் காய்கறியில் சிறந்ததொரு உணவுப் பொருள் முள்ளங்கி. அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவர். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்கவும் பயன்படுகிறது.
தண்ணீர்: அதிக நீர் அருந்துவதால், நோய்கள் வருவதை தடுக்கலாம். முக்கியமாக, தண்ணீரும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும்
உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு: கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவு சர்க்கரை வள்ளிக் கிழங்கு. ஆதி காலம் முதல் மனிதர்கள் சாப்பிட்டு வந்த இயற்கை உணவு. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது.
இலவங்கப்பட்டை: இலவங்கப் பட்டை பண்டைய காலம் முதல் நாம் உணவில் சேர்த்து வரும் மருத்துவ நன்மை கொண்ட உணவுப் பொருள். பாக்டீரியாக்களை எதிர்க்க, இலவங்கப் பட்டை உணவில் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை துரத்தும் திறன் கொண்டது இலவங்கப் பட்டை.E 1479631168

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button