சிற்றுண்டி வகைகள்

ஹமூஸ்

என்னென்ன தேவை?

வேகவைத்த வெள்ளை கொண்டைக்கடலை – 1/4 கப்,
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 1 பல்,
ஆலிவ் ஆயில் – 4 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
உப்பு, காய்ந்த மிளகாய் (விதை உடையாமல் பொடிக்கவும்) – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

வெள்ளை எள்ளுடன் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நைஸாக அரைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நைஸாக இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன் அதன் மேல் ஊற்றி காய்ந்தமிளகாய் தூவி, சப்பாத்தி, கேரட், வெள்ளரிக்காய் குச்சிகளுடன் பரிமாறவும்.sl4735

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button