இனிப்பு வகைகள்

பலம் தரும் பாரம்பர்ய மிட்டாய்!

நம் பாரம்பர்ய மிட்டாய்கள் அனைத்தும் உடனடியாக எனர்ஜியையும் ஊட்டச்சத்தையும் தரக்கூடியவை. அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம்!

கடலை மிட்டாய்

கரும்புச்சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்கடலையையும் சேர்த்து தயாரிக்கப்படுவது கடலை மிட்டாய். வேர்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி, உடல்சோர்வு, மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்க உதவுகின்றன. வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையைத் தவிர்க்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும்.

இஞ்சி முரப்பா

இதன் மூலப்பொருளே இஞ்சியும் வெல்லமும் தான். இஞ்சியில் உள்ள சத்துக்கள் உடல் வலி, குமட்டல், பசியின்மை ஆகியவற்றுக்கு நல்லது. சாப்பிட்ட பின் இஞ்சி முரப்பா மிட்டாய் சாப்பிடுவது, செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

p47a

எள்ளு மிட்டாய்

கறுப்பு எள் மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படுகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்தும் எள்ளில் கால்சியமும் நிறைந்துள்ளன. இது, இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும்.

சில்லுக்கருப்பட்டி

கருப்பட்டி தயாரிப்பின் கடைசியில், சுக்கு, ஏலக்காய் கலந்து சில்லுக்கருப்பட்டி தயாரிக்கிறார்கள். இதிலுள்ள கால்சியத்தால், பற்களும் எலும்புகளும் வலுவடைகின்றன. பதின் பருவப் பெண்களுக்கு சில்லுக்கருப்பட்டியில் ‘உளுத்தங்களி’ செய்து கொடுத்தால், கர்ப்பப்பை மற்றும் இடுப்பு எலும்பு வலுவடையும்.

பொரி உருண்டை

கார்போஹைட்ரேட், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது; செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் இருக்கும் சுக்கு, உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button