கை வேலைகள்பொதுவானகைவினை

சோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி?

தேவையானவை

  • சோப் (லக்ஸ், ரெக்ஸோனா, ராணி, etc)
  • பேபி ரிப்பன் – 10 மீட்டர்
  • குண்டூசிகள்
  • மணிகள் (Beads)
  • பூ செய்யும் கம்பி – 6 அடி
  • பிளாஸ்டிக் பூக்கள், இலைகள்
  • கத்திரிக்கோல்

செய்முறை

குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும்.

குண்டூசியில் மணியை கோர்த்து சோப்பின் மேற்புறமும், அடிப்புறமும் நீள்சதுரமாக வரிசையாக சொருகவும். பின்னர் சோப்பின் ஓரப்பகுதியில் சுற்றிவர படத்தில் காட்டியுள்ளவாறு சொருகவும். (இதற்கு தட்டையான சோப் பயன்படுத்த வேண்டாம். மேற்புறமும் கீழ்புறமும் வளைந்த அல்லது உருண்டையான சோப் பாவிக்கவும். பொதுவாக குளிப்பதற்கு உபயோகிக்கும் சோப் பொருத்தமாக இருக்கும்.)

பின்னர் சோப்பின் கீழ் புறத்தில் படத்தில் காட்டியுள்ளது போல ரிப்பனை குண்டூசியால் இணைக்கவும்

பின்னர் ரிப்பனை நேரே கீழே இழுத்து ஓரத்தில் குற்றிய குண்டூசியினூடாக சுற்றி மேலே எடுத்து மேற்புறமுள்ள குண்டூசியினூடாக சுற்றவும்.

படத்தில் உள்ளவாறு ரிப்பனை குண்டூசியில் சுற்றி பின்னவும்

இவ்வாறு தொடர்ந்து சுற்றிவர செய்யவும்

கீழ் சுற்று முடிந்ததும், ரிப்பனை மேலே எடுத்து சோப்பில் வைத்து குண்டூசியால் சொருகவும்.

பின்னர் கீழ் பக்கம் சுற்றியது போல மேற்பக்கம் உள்ள குண்டூசிகளையும் விளிம்பில் உள்ள குண்டூசிகளையும் இணைத்து ரிப்பனை சுற்றவும்.

சோப்பு முழுவதும் இப்படியே சுற்றிவர செய்யவும்

முழுவதும் சுற்றி முடித்தபின் ரிப்பனின் முனையை மேற்பக்கத்தில் சோப்புடன் சேர்த்து குற்றவும்.

இப்போது பூக்கூடையின் அடிப்பகுதி தயார்

பின்னர் பூச்செய்யும் கம்பியில் 2 அடி நீளமான துண்டுகள் மூன்று வெட்டி தனித்தனியே மடித்து முனைகளை இணைக்கவும். இப்போது ஆறு 1 அடி நீளமான துண்டுகள் இருப்பது போல் தெரியும்.

பின்னர் பின்னல் பின்னுவதுபோல கம்பிகளை சேர்த்து பின்னவும்.

சுற்றிய கம்பியை அரை வட்டமாக வளைத்து சோப் கூடையின் மேற்பக்கத்தில் இணைக்கவும். அழகான பூக்கூடை தயார்

பின்னர் பிளாஸ்டிக் பூக்கள், இலைகள், ரிப்பன், குருவிகள் அல்லது பைன் கோன் கொண்டு கூடையை அலங்கரிக்கவும்.

உங்கள் கற்பனை திறனுக்கேற்ப அலங்கரித்துக் கொள்ளலாம். இது செய்வதற்கு எளிதானது. பார்வைக்கு மிகவும் அழகானது.

Related posts

ரிப்பன் எம்பிராய்டரி

nathan

ஒயர் கலைப்பொருட்கள்

nathan

நவீன மங்கையர் விரும்பும் மெட்டல் ஜூவல்லரி

nathan

வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணக்கொடிகள்

nathan

சில்வர் வால் ஹேங்கிங்

nathan

OHP சீட்டில் ஓவியம்

nathan

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika

கேரட் கார்விங்

nathan

பானை அலங்காரம்

nathan