பழரச வகைகள்

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்
தேவையான பொருட்கள் :

கேரட் – 2
தக்காளி 2,
கருப்பு உப்பு – கொஞ்சம்,
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
புதினா இலைகள் – 10.

செய்முறை :

* கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.

* அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும்.

* உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.201704151257400005 carrot tomato juice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button