ஆரோக்கிய உணவு

முளைக்கட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? கூடாதா?

பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு பிரியர்கள், அதனை எப்படி சமைத்தாலும் சாப்பிட்டுவிடுவார்கள். இத்தகையவர்கள் வீட்டில் எப்போதுமே உருளைக்கிழங்கு இருக்கும். ஆனால் அப்படி மொத்தமாக வீட்டில் வாங்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைக்கட்டினால், அதை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று தெரியாது.

இது குறித்து அகமதாபாத்தை சேர்ந்த உணவுமுறை மற்றும் ஊட்டச்ச்சத்து நிபுணர் டாக்டர், ஸ்வாதி விளக்கம் அளித்துள்ளார். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆரோக்கியமானது அல்ல முளைக்கட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. உருளைக்கிழங்கில் முளைக்கட்டினால், அதை சாப்பிடக்கூடாது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். மேலும் உருளைக்கிழங்கு முளைக்கட்டுவதால், அதனுள் ஒருசில இரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

சர்க்கரை அளவு உயர்வு முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் நன்கு முற்றிய உருளைக்கிழங்கு மென்மையாக இருப்பதற்கு, அதில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாற்றமடைந்திருப்பது தான்.

விஷமிக்க அல்கலாய்டுகள் உருளைக்கிழங்குகள் இப்படி மாற்றமடையும் போது அது இரண்டு வகையான விஷமிக்க அல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது. அவையாவன சோலனைன் மற்றும் ஆல்பா சாகோனைன். இதில் சோலனைன் மிகவும் விஷமிக்கது. இதனை சிறிதளவு உட்கொண்டாலே மிகவும் ஆபத்து. இதனால் பல தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பச்சை உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோல் பச்சையாக இருந்தாலும், அதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் அந்த அல்கலாய்டுகள் இருக்கும். ஒருவேளை நீங்கள் வாங்கிய உருளைக்கிழங்கில் பச்சை நிறத்தோல் இருந்தால், அப்பகுதியை நீக்கிவிடுங்கள்.

ஆய்வு முடிவு பொதுவாக முளைக்கட்டியது ஆரோக்கியமானது என்ற கருத்து இருப்பதால், இதுக்குறித்து ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் தோல் நன்கு பிரஷ்ஷாக இருந்தால், அதில் உள்ள முளைக்கட்டியதை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் வலிமையுடன் இருக்கும் உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துக்ள் அப்படியே இருக்குமாம். ஆனால் அதுவே சுருங்கிவிட்டால், அதன் முழுச்சத்துக்கள் நீக்கிவிடுவதால், அதனை தூக்கி எறிந்துவிட வேண்டுமாம்.

உருளைக்கிழங்கு முளைக்கட்டாமல் இருக்க சில டிப்ஸ்… * உருளைக்கிழங்கில் 78% நீர்ச்சத்து இருந்நதால், இது 5-7 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஆனால் அதனை குளிர்ச்சியான, கருமையான மற்றும் காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். * உருளைக்கிழங்கை ஈரப்பதமிக்க இடத்தில் வைத்து பராமரித்தால், முளைக்கட்டுவதோடு, விரைவில் கெட்டுப் போகவும் கூடும்.

உருளைக்கிழங்கு முளைக்கட்டாமல் இருக்க சில டிப்ஸ்… * பிளாஸ்டிக் பைகளில் உருளைக்கிழங்கை சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் உருளைக்கிழங்கு முளைக்கட்ட ஆரம்பிக்கும். வேண்டுமானால் பேப்பரைச் சுற்றி பாதுகாக்கலாம். * எக்காரணம் கொண்டும் உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்துப் பராமரிக்க வேண்டாம். ஏனென்றால், ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் போது, அதில் உள்ள ஸ்டார்ச் சர்க்கயாக மாற்றமடைந்து, இனிப்பாகும்.

குறிப்பு ஏன் உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி முளைக்கட்டும் வரை வீட்டில் வைக்கிறீர்கள்? அதை கொஞ்சமாக வாங்கி, அவ்வப்போதே சமைத்து சாப்பிட்டால், எதற்கு இப்பிரச்சனையெல்லாம் வரப்போகிறது. எனவே பிரஷ்ஷாக வாங்கி, சமைத்து சாப்பிட்டு, அதன் முழுப்பலனையும் பெறுங்கள்.

18 1442573027 2 potato1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button