மருத்துவ குறிப்பு

உங்கள் மனைவியின் டென்ஷன் குறைக்கும் ‘இரண்டு மந்திரங்கள்’ என்ன தெரியுமா?

திருமணம் என்னவோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. நாம் வாழும் வாழ்க்கையும் அப்படி இருக்க வேண்டாமா? காதல் காலத்தில் மூளையில் சுரக்கும் கெமிக்கல் எந்தச் சூழலிலும் மகிழ்ச்சியிலேயே மிதக்க விட்டு இன்ப வலிகளால் நெஞ்சம் நிறைக்கும். திருமணத்துக்குப் பின் எல்லாம் காலியாகி விடுகிறதே ஏன்? யோசித்திருக்கிறீர்களா!. காதலன் கணவனாகவும், காதலி மனைவியாகவும் அவதாரம் எடுத்த பின் அவரவர் ‘பிளஸ்’ எல்லாம் தொலைத்து விடுகிறோம்.

மனசு முழுக்க ‘மைனஸ்’களை மட்டும் அடுக்கி வைத்து அலசிப் பார்ப்பதால் வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது. இதனால் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது மூளையில் டென்ஷனுக்கான ஹார்மோன்கள் சுமந்து உங்களது வாழ்வையே கசப்பில் தள்ளுகிறது. இதுவே தொடர்ந்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பின் நெருக்கம் குறைந்து அந்த உறவே உடையும் அளவுக்கு இறுகி இம்சிக்கிறது. இந்த வேக வாழ்க்கையில் இதற்கெல்லாம் யோசித்தே ஆக வேண்டும்.

நாம் பரபரப்பாக இல்லாவிட்டால் நிகழ்காலம் நம்மை ஓல்டு வெர்ஷன் என்று உதறித் தள்ளிவிட்டு கடந்து விடும். வெற்றிக்கான உழைப்பையும் அள்ளித் தந்தே ஆக வேண்டும். வாட்ஸ் அப்பில் வாயாடாமலோ, பேஸ்புக்கில் நம் கருத்துகளைப் பகிராமலோ இருக்க முடியாது. இருப்பினும் அன்புக்கான நேரத்தை நாம் ஒதுக்கியே ஆக வேண்டும். நமது அன்புக்காக ஏங்கும் உள்ளங்களை இதற்காக புறந்தள்ளத் தேவையில்லை. நம் வேகமான இயக்கத்துக்கு எனர்ஜி தருவது காதலும் அன்புமே…அன்பு செய்வதிலும் பரபரப்பு குறையாமல் இருங்கள். மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் கணவன்மார்களே. உங்கள் செல்ல மனைவியின் டென்ஷன் குறைக்க நீங்கள் இரண்டு மந்திரங்களை பாலோ செய்யுங்கள்!
shutterstock 93529864 18466 18105
மனைவி

அவை என்னவென்று பார்ப்போமா!

கணவன் மனைவிக்குள் ஊடல் இருக்கலாம். அது கூடலின் சுவையைக் கூட்டும். ஆனால் அந்த அற்புத உறவுக்குள் ஊடல் மட்டுமே இருப்பின் அன்புக் கூடே கலைந்து விடுமல்லவா! எதிரும் புதிருமாக ஒரே வீட்டுக்குள் இரண்டு கத்திகள்…ஒன்றை ஒன்று எப்போது வீழ்த்தலாம், எப்படிக் கொல்லலாம் என்று போர்க்கோலம் பூண்டால் வீடு ரணகளம் ஆகிடுமே. இது இருக்கும் சூழலை கசப்பாக்குவதுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கவனக்குறைவு, உற்சாகமின்மை போன்ற நெகட்டிவ் எனர்ஜிகளையும் அதிகரிக்கும்.

சரி இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே. சண்டையில்லாத வீடு எங்கே இருக்கிறது? ஊடல் இல்லாத கணவன், மனைவி எங்கே இருக்கிறார்கள் என்று தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டீர்களா? வாழ்க்கைத் துணைகளுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க அடிக்கடி கட்டிப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். சுவிச்சர்லாந்தில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழக மருத்துவர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இதை நமக்கு சொல்லியுள்ளனர்.

உங்கள் வாழ்க்கைத் துணையை கட்டிப் பிடிக்கும் போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது தெரியுமா? அன்பின் நெருக்கம் அதிகம் உள்ள ஜோடிகளுக்கு இடையில் மன அழுத்தம் மிகவும் குறைவாக இருந்துள்ளது. அடிக்கடி நீங்கள் கட்டிப் பிடித்து அன்பைப் பொழியும் போது காதல் ஹார்மோன்கள் உங்கள் மனசு முழுக்கவும் ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. அணைத்தும், முத்தமிட்டும் அன்பைக் கொண்டாடும் போது மன அழுத்தத்துக்கான ஹார்மோன்கள் சுரக்கும் அளவும் குறைந்து விடுகிறது. இப்போது புரிகிறதா உங்கள் மனைவி டென்ஷன் குறைக்கும் மிகச்சிறந்த இரண்டு மந்திரங்கள் இவை தான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை அணைத்து அன்பைப் பொழியுங்கள். கோபத்தில் வார்த்தைகளுக்கு நுனிமூக்கு சிவந்தால் முத்தமிட்டு நாணத்தால் சிவக்க வையுங்கள். கோபம் கரைந்து காதல் பெருகும்.

அன்பின் நெருக்கத்தையும் பேலன்ஸ்டாக பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் மனைவிக்கான வேலைப்பளு அதிகரிக்கும் போது அந்த அழுத்ததில் இருந்து வெளி வர கோபத்தில் வெடிப்பது வழக்கம். உடனடியாக ரியாக்ட் செய்திட வேண்டாம். அவர்களது வேலைப்பளுவை குறைப்பதற்கான நடவடிக்கையை கணவன் எடுக்க வேண்டும். அப்போது மனைவியின் மனதில் கணவன் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அந்த இடத்தில் மனைவியின் செல்லக் கோபத்தை முத்தம் கொண்டு ஊதித் தள்ளுங்கள். ஆம் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது மற்றவர் அதை போக்குவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். இரண்டு மனமும் சமநிலையில் சந்திக்கும் போது தான் எந்த மகிழ்வையும் முழுதாக கொண்டாட முடியும்.

மனைவி டென்ஷன் ஆன பின்புதான் கட்டிப் பிடிக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் மனைவி எதிர்பாராத அன்புத் தருணங்களை மிஸ் செய்து விடவேண்டாம். வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன், வெளியில் கிளம்பும் போது செல்லப் பாராட்டுதலுடன் ஒரு ஹக். குளித்து வந்த பின், அழகாய் உடுத்திக் கொண்ட பின் இப்படி அன்புக்கு அளவேது. குறைந்த பட்சம் ஒரு நாளில் நான்கு முறையாவது கட்டிப்பிடித்து முத்தமிட்டு கிறங்கடிக்க வேண்டும் உங்கள் இணையை.

பெண்கள் எப்போதும் வீட்டில் அடைந்து கிடப்பதால் ஜாலியாக ஊர் சுற்ற அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு பிடித்த இடம், விளையாட்டு, ஸ்நாக்ஸ் என்று கொஞ்சம் செலவழிக்கலாம். இப்படியான ஊர் சுற்றலின் போது வெளியில் டின்னர் முடித்து விடலாம். கணவன், மனைவிக்கான பர்சனல் நேரங்களை வேறு எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாதத்தில் இரண்டு முறையாவது காதல் உணர்வுடன் சுற்றுலா திட்டமிடலாம். உங்கள் இருவருக்கான பயணம் அது. இயற்கை எழிலும், தனிமையும் உங்களின் மூட் மாற்றும். டென்சனை உதறிவிட்டு மனம் காதலுக்குத் தாவும். விரல்கோர்த்து நடப்பதும் செல்ல அணைப்பும், சீண்டலும், ரகசிய முத்தமிடலும் பேரின்பத்துக்கான சாவிகள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button