சூப் வகைகள்

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

குழந்தைகளுக்கு கேழ்வரகை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்குவதன் மூலம், அவர்கள் உடல்வலுவைப் பெறலாம். இன்று ராகி நூடுல்ஸ் வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம்.

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள் :

ராகி நூடுல்ஸ் – அரை பாக்கெட்,
கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு – தலா 1,
பச்சைப்பட்டாணி – கைப்பிடி,
பீன்ஸ் – 5,
பூண்டு பல் – 2,
இஞ்சித் துருவல், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
பிரியாணி இலை – 1, உப்பு தேவையான அளவு.

201704260905232103 how to make ragi noodles veg soup SECVPF
செய்முறை :

* ராகி நூடுல்ஸை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (கேழ்வரகை வாங்கி முந்தைய நாள் ஊறவைத்து, முளைக்கட்டி காயவைத்து அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, இந்த மாவில் வெந்நீர் விட்டுப் பிசைந்து, இடியாப்பக் குழாயில் வைத்துப் பிழிந்து, ஆவியில் வேகவைத்து எடுத்துப் பயன்படுத்தலாம்.)

* காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை சேர்த்து சூடானதும், காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, பிரியாணி இலை சேர்க்கவும்.

* அதனுடன் 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கி, காய்கறிகளை மசிக்கவும்.

* அடுத்து அதில் மிளகு, சீரகத்தூள் சேர்க்கவும்.

* விருப்பப்பட்டால் அரை டம்ளர் பால் சேர்க்கலாம்.

* பரிமாறும் முன் வேக வைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

* ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப் ரெடி.

பலன்கள்: கேழ்வரகு, எடையைக் குறைக்க உதவும். தொப்பையைக் குறைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். எலும்பு, தசை உறுதிபடும். வயிறு நிரம்பியிருக்கும். இதனால் அதிக நேரம் பசிக்காது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button