கால்கள் பராமரிப்பு

இந்த ஒரே ஒரு டிப்ஸ் உங்கள் பாதத்தை பட்டு போல் ஆக்கும்! எப்படின்னு பாருங்க.

உள்ளும் புறமும் அழகாய் இருக்கனும் என்பது போலவே இரண்டையும் தாங்கும் பாதங்களும் அழகாய் இருக்க வேண்டும்.

சிலர் அழகாய் இருந்தாலும் பாதங்கள் கரடு முரடாய், வெடிப்புடன் இருக்கும். இவரகள் என்னதான் அலங்கரித்தாலும் பாதம் வெடிப்புடன் இருந்தால் அவருக்கு மார்க் ஜீரோதான்.

அதோடு அவை ஆரோக்கியமின்மையும் குறிக்கும். இதனை எப்படி சரிப்படுத்தலாம் என்பதற்கான ஒரு அருமையான தீர்வுதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. இதற்கு வெறும் 5 நிமிடம் தினமும்செலவழித்தால் போதும். மேலும் படியுங்கள்.

தேவையானவை : வெள்ளை சர்க்கரை – 1 கப் சமையல் சோடா- 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன் தேன் – 2 ஸ்பூன்

விருப்பமிருந்தால் : உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த எண்ணெய்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றாலும் பிரச்சனையில்லை. மேலே சொன்னவற்றை மட்டும் தொடருங்கள்.

ஜுஜுபா எண்ணெய் – 1 டீஸ்பூன் வாசனை எண்ணெய் ( பாதாம், லாவெண்டர்) – சில துளிகள்.

செய்முறை : ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை போடுங்கள். அதில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து கலக்குங்கள். பிறகு சமையல் சோடா சேர்க்கவும். நன்றாக கலந்த பின் தேனை சேருங்கள். நன்றாக கலந்தபின் ஜொஜொபா எண்ணெய் மற்றும் வாசனை எண்ணெய் கலக்கவும்.

உபயோகிக்கும் முறை : குளிப்பதற்கு முன் இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள். கால்களில் வட்ட வடிவில் தேய்க்கவும். கடினமான பகுதிகலில் அதிக கவனம் செலுத்துங்கள். 5 நிமிடம் இதனைக் கொண்டு ஸ்க்ரப் செய்த பின் குளிக்கவும். சோப் எதுவும் போட வேண்டாம். இது ஈரப்பதம் அளிக்கும். தினமும் இவ்வாறு செய்தால் பாதங்கள் மிருதுவாகி வெடிப்பின்றி காட்சியளிக்கும்.

கைகளுக்கும் : இந்த ஸ்க்ரபை கைகளுக்கும் உபயோகபடுத்தலாம். இதனை கைகளுக்கு பயன்படுத்தும் போது கைகளில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள் அகன்று மிருதுவாகும்.

feet 14 1481708910

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button