மருத்துவ குறிப்பு

பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்து

பெண்களே நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறீர்கள் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்து
வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டி.வி. மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டி.வி., பெண்களின் உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

டி.வி. மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டி.வி. பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களே நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் நீங்கள் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறீர்கள் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. உடலியல் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியாளர் பிரிகிட் லின்ச் இதுபற்றி கூறுவதாவது:- “உடல் உழைப்பு குறைவது மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

201704281347140245 Women more time watching TV danger SECVPF

பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம். நீங்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தோ அல்லது படுத்துக்கொண்டோ இருப்பதால் உங்களுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது. ஒரு நாளின் அதிக மணி நேரங்கள், வாரத்தின் அதிக நாட்கள், வருடத்தின் அதிக வாரங்கள் என தொடர்ந்து நீங்கள் உடல் உழைப்பே இல்லாமல் இருக்கிறீர்கள்.

இவை அனைத்தும் சேர்ந்து உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. உடல் எடை அதிகமானதால் உங்களால் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் உடல் உழைப்பு குறைந்து, குறைவான ஆற்றலே உங்கள் உடலுக்கு தேவைப்படுகிறது.

பெண்களுக்கு உடல் தசைகள் வேலையின்றி சும்மாவே இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்சைம்களின் அளவு குறையத் தொடங்குகிறது. இது பல ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த என்சைம்கள் தான் உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைக்க உதவுகின்றன.

நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போதும் உங்களின் கை, கால்கள், முதுகெலும்புகள் என அனைத்தும் முற்றிலும் ஓய்வில் இருக்கும். நீங்கள் ஓடிக்கொண்டோ அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டோ இருக்கும் போது உங்கள் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தி, அதன் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்; உடல் உழைப்பு இல்லாமல் உடல் உறுப்புக்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்து கொண்டே இருப்பதால் காலப் போக்கில் அவை மெல்ல மெல்ல தம் செயல்பாட்டை இழக்கின்றன.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதனால் டிவி பார்ப்பதை குறைத்துக்கொண்டு உடல் உழைப்பை அதிகப்படுத்தும் வேலையை செய்தால் நமது ஆரோக்கியம் காக்கப்படும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button