சிற்றுண்டி வகைகள்

சொஜ்ஜி

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்,
பாசிப்பருப்பு – 1/4 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – 3 கப்,
காய்ந்தமிளகாய் – 4,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு அரிசியையும், பாசிப்பருப்பையும் கழுவி, 3 கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும், சீரகம் போட்டு சற்று சிவந்ததும் கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவற்றை ஊறவைத்த அரிசி, பருப்பு, உப்புடன் சேர்த்து கலந்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேக வைத்து சூடாக பரிமாறவும்.sl4803

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button