எடை குறைய

உடல் எடையைக் குறைக்க தேன் டயட்டை ஃபாலோ பண்ணி பாருங்களேன்!,slim beauty tips tamil

 

22-1419224309-3-honey

தேன் டயட் என்றால் என்ன? தேன் போன்ற ஃப்ரூக்டோஸ் வளமையாக உள்ள பொருட்களை உட்கொண்டு வந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவில் கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றல் திறன் அளவுகளும் அதிகரிக்கப்பட்டதை தேன் டயட்டை கண்டுப்பிடித்த மைக் மெக்கனஸ் அவர்கள் கண்டுபிடித்தார். நம் ஈரல் அதிகமான அளவில் குளுக்கோஸை சுரக்க தேன், ஒரு எரிபொருளாக உதவுகிறது. இந்த குளுக்கோஸ் மூளையில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக வைத்திடும். இதனால் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை அது சுரக்க தூண்டும்.

எடையை குறைக்க தேனை எப்படி உட்கொள்ள வேண்டும்? தேன் டயட்டில் இருந்து பயனை பெற, நாள் முழுவதும் சர்க்கரை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக தேனை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள். கூடுதலாக, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேனை கலந்து குடியுங்கள். இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடிக்கவும். கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும். தேனை உட்கொள்வதை பழக்கப்படுத்தி விட்டால், சர்க்கரைக்காக உங்கள் மூளை ஏங்குவது முழுமையாக நின்றுவிடும் என ஆய்வுகள் கூறுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது? அதிகளவிலான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நம்மில் பலரும் உட்கொண்டு வருவதால் தான் உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்படுகிறோம் என மைக் மெக்கனஸ் கூறியுள்ளார். தூங்கச் செல்வதற்கு முன்பு தேன் குடித்தால், தூங்க ஆரம்பித்த ஆரம்பகட்ட நிலையில், உங்கள் உடல் அதிகளவிலான கொழுப்புகளை எரிக்க தொடங்கும். நீங்கள் ஒரு படி மேலே சென்று, உங்கள் தேன் டயட்டின் ஒரு பகுதியாக, உட்கொள்ளும் அனைத்து ரிஃபைன்ட் சர்க்கரையையும் மாற்றி விட்டால், அதிகமாக சர்க்கரை உணவுகளை உட்கொள்ள தூண்டும் மூளையின் சமிக்ஞை சமநிலையாகிவிடும்.

சர்க்கரைக்கு பதில் தேனை மாற்றுங்கள் உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை நீக்குங்கள். அப்படியானால் அதில் செயற்கை இனிப்புகளும் தான் அடங்கும். உங்கள் தேநீர், காபி மற்றும் தானிய உணவுகளில் சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்துங்கள். நீங்கள் சமைக்கும் பொருட்களின் மீதும் ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அங்கேயும் சர்க்கரையை பயன்படுத்தாமல் இருக்கலாம்ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும் ஜங்க் உணவுகள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளாகும். அதில் கலோரிகள் மட்டுமே முழுமையாக அடங்கியுள்ளது. தேன் டயட்டில் இருந்து முழுமையான பயனை பெற ஜங்க் உணவுகளை உட்கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button