சைவம்

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

சிறுதானியங்களில் குதிரைவாலி மிகவும் சத்து நிறைந்தது. இன்று குதிரைவாலி அரிசியை வைத்து சத்துநிறைந்த தேங்காய் சாதம் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – ஒரு கப்,
கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப்,
தண்ணீர் – ஒரு கப்,
நெய் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய், பட்டை, லவங்கம், கறிவேப்பிலை – தேவையான அளவு,
சர்க்கரை – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* குதிரைவாலியை அரிசியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

* அடிகனமான பாத்திரத்தில், தண்ணீரில் நன்கு களைந்த குதிரைவாலி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.

* முக்கால் பதம் வெந்ததும்… உப்பு, தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்க்கவும்.

* சாதம் வெந்தவுடன்… நெய்யில் தாளித்த ஏலக்காய், பட்டை, லவங்கத்தை தேங்காய் சாதத்தில் சேர்த்துக் கிளறி இறக்கவும்…

* சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி. kuthiraivali coconut rice Barnyard millet coconut rice

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button