ஆரோக்கிய உணவு

ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி?

‘கடல் மீன், ஆத்து மீன், குளத்து மீன், ஏரி மீன்
என்று எங்கெங்கெல்லாமோ மீன்?
வஞ்சிரம், கொடுவா, வாளை, இறால் என்று
கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!’ – இப்படியொரு கவிதை வரியை படித்தது நினைவில் வருகிறது.

மீன் என்றதும் நாவில் எச்சில் ஊறும். பொதுவாக அதன் முட்களை நீக்கிவிட்டு சதையைத் தின்பதிலும், சிலவகை மீன்களில் அதன் எலும்புகளை சக்கையாகும்வரை பற்களால் மென்று தின்பதிலும் ஒரு சுகம். இவை எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குவதில் மீன்களுக்கு நிகர் மீன்களே! உலகத்திலுள்ள தானியங்கள், காய்கறிகள், ஜீவராசிகள் போன்றவை முற்றிலும் அழிந்துபோனாலும்கூட மனிதக்குலத்துக்குத் தேவையான உணவை இன்னும் நூறு வருடங்களுக்கு வழங்க கடல் அன்னை தயாராக இருக்கிறாள். அதேவேளையில் மீன்களின் மரபணுமாற்றம், வேதியியல் மாற்றம் போன்றவை கடலை இன்னும் நெருங்க முடியவில்லை. காரணம் உலக அளவில் கடல் பரப்பளவு 70 சதவிகிதம் மீதமிருக்கும் 30 சதவிகிதம் மட்டுமே நிலத்தின் பரப்பளவு ஆகும்.
%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%92%E0%AE%B0%E0%AF%81 %E0%AE%B5%E0%AE%95%E0%AF%88 18087
சிங்கி இறால் மீன்

சிங்கி இறால்

1975-களில் மெரினா கடற்கரைக் குப்பத்துக்கு அவ்வப்போது என் அம்மா என்னை அழைத்துப்போவதுண்டு. நானும் உடன் சென்று வருவேன். மெரினா சென்றுதிரும்பியதும் சோறுபொங்க அம்மா அரிசி வாங்கப்போயிருக்கும் நிலையில், பசிதாளாமல் குழந்தைகள் எல்லாம் கத்தும் நான் உள்பட; அந்தச்சூழலில் அப்போதுதான் பிடித்து வந்திருக்கும் `லாப்ஸ்டார்’ எனப்படும் சிங்கி இறால்களை மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கடாயில் வறுத்தெடுத்து கொடுப்பார்கள். ஒவ்வொரு இறாலும் சுமார் ஒருகிலோவரை தேறும். இப்போது செத்து நாற்றமடிக்கும் அந்த இறாலின் விலை சுமார் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து துவக்கம். சிலநேரம் கதம்ப இறால்கள் (பிரியாணிக்கு இந்த இறாலே தலைசிறந்தது) வெள்ளை இறால்கள், சமைக்கை இறால்களும் சமையலில் உண்டு. அந்த இறால்களேயே தின்றுவிட்டு பசியாறி உறங்குவதும் உண்டு.

இறால்களில் நல்லகொழுப்பு, அயோடின் முதலான சத்துகள் உண்டு. இவை உடல் வளர்ச்சிக்கு உகந்தது. ஆனால் கூடவே வாயுத்தொல்லையைத்தரும். இப்படித்தான் 2001-ல் என் அம்மா எனக்கு ஒன்றரைகிலோ லாப்ஸ்டார் இறாலை வறுத்துவைக்க, விஷயம் தெரியாமல் அதை சாப்பிட்டு முடித்த ஒருமணி நேரத்துக்குள் கைகால்களில் பிடிப்பு ஏற்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏராளமான வெள்ளைப்பூண்டை தின்ன வேண்டியதாயிற்று. அதனால், இறால்களில் சிறிய அளவிலான இறால்களையே வாங்கவேண்டும். அதுவும் மழைமெதுவாக பெய்திருக்கும் அந்த நேரத்தில் பிடிக்கப்படும் பொடி இறால்களையே வாங்கவேண்டும். முப்பது வயதுக்கு மேற்பட்டோர் கொஞ்சம் பெரிய அளவிலான இறால்களை கொஞ்சம் அதிகப்படியாக தின்றுவிட்டால் பிறகு மூட்டுவலியால் அவதிப்பட நேரிடும்.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காட்டில், ஆரம்பாக்கத்தில் பிடிக்கப்படும் இறால்கள் உலகப்புகழ் பெற்றவை. அங்கே பிடிக்கப்படும் இறால்களை வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், அப்போது மனிதனாகப் பிறந்தவன் எவ்வளவு பாக்கியசாலி எனத் தெரியவரும். ஆனால் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கடலோ அல்லது ஆற்று இறாலோ கிடைப்பதில்லை. நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவிகிதம் வளர்ப்பு இறால்களே! அதில் சுவையின்றி தன்விரலை தானே கடித்துக்கொள்வது போலுள்ளது, மணம்? ஆழ்ந்து மூச்சை இழுத்தால் சர்வரின் வியர்வை வாடைதான் வருகிறது!

மத்தி மீன்

மத்தி மீனை அநேகமாக எல்லோரும் உண்டிருப்பார்கள். குறிப்பாக, கேரளாவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே இதை சாளை என்பார்கள். தமிழகத்து மத்திமீனைவிட கேரளாவின் மத்திமீன் ருசியில், சதையில், மணத்தில், மருத்துவக்குணத்தில் தலைசிறந்தது. ஆனாலும், எக்காலத்திலும் ஏழைகளின் உணவு இதுவே. காரணம் விலை குறைவாக கிடைக்கும் என்பதே. ஆனால் வியாபாரிகளுக்கே கேரள மத்தி மீன் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் வரத்து வேறு குறைந்துகொண்டே வருகிறது. இந்த மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகளோடு பி2 என்ற வைட்டமினும் உள்ளது. இது நரம்புமண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. அத்துடன் கவளை மீனையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மீனை மாங்காய்போட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும். அந்தக்குழம்பை மறுநாள் சுண்டவைத்து சாப்பிட்டால் சொர்க்கத்தின் இந்திர பதவியே கிடைத்துவிடும், போங்க!

காரப்பொடி

பொதுவாக மார்க்கெட்டுக்கு வருபவர்கள் புதிய மீனாகத்தான் கேட்பார்கள். அதிலும் ஐஸ் வைக்காத மீனாகத்தான் வேண்டுமென்பார்கள். வியாபாரிகளும் நீங்கள் விரும்புகிறார்போல்தான் மீன்களை விற்றுவிடுவார்கள். ஐயா சாமிகளே, உங்களுக்கு ஒரு உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். ஆற்றில் கிடைக்கும் விரால் மீன், ஆற்று நண்டு, அயிரை மீன் முதலான ஆற்று அல்லது குளத்து மீன்களே உயிருடன் கிடைக்கும். கடலில் அதற்கு சாத்தியமில்லை, சாதாரணமாக தங்கல் எனும் லாஞ்சியில்தான் மீன் பிடிக்கப் போகிறார்கள். குறைந்தபட்சம் பத்து நாளாவது கடலில் தங்கி மீன் பிடிப்பார்கள். கட்டுமரத்தில் அல்லது சாதாரண ஃபைபர் படகில் சென்றாலும் குறைந்தது அரைநாளாவது ஆகும். பிடிக்கும் மீன்களை ஒழுங்காக ஐஸ் வைத்து பதப்படுத்தி அவற்றை மார்க்கெட்டுக்கு எடுத்து வருவார்கள். அதுவே நல்ல மீன். தவிர அப்போதே பிடித்து அப்போதே வறுத்தால் உங்களால் சாப்பிடமுடியாது, காரணம் கடினமாக இருக்கும்.
18279
வஞ்சிரம்

உதாரணத்துக்கு வஞ்சிரம் மீனை அப்போதே பிடித்து, அதை ஸ்லைஸ் போட்டு வறுத்தால் கடினமாகிவிடும். எனவே புதிதான மீன் என்றால் அது மீனவர்களின் நாக்குக்கே சுவை, உள்ளூர் மக்களுக்கோ பெரும்பகை. காசிமேடு மீனவர் ஒருவர் சங்கரா மீனை அப்போதுதான் அதாவது சுமார் இரண்டுமணி நேரத்தில் பிடித்து, குழம்புசெய்து அதை எனக்குத் தந்தார். சாப்பிட்டால் அதன் சதை அவ்வளவு கடினம், கூடவே ருசியும் குறைவு. இதேமீனை ஒரு அரைநாள் ஐஸ்-சில் வைத்துச் சாப்பிட்டால் அதன் சுகமே தனிதான்! ஆனால் அவருக்கோ இந்த புத்தம்புது மீன்தான் உயிர்! இதேபோல் புதிதான வஞ்சிரம் மீனின் தலையையோ அல்லது உடலையோ குழம்பு வைத்துவிட்டால் பிறகு வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களிலும் அந்த வாசனை வீசும்.
(%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE) 18596
கொடுவா

இப்போது தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம். ஆனால் சாதாரண ஃபைபர் படகில் சென்று பிடிக்கலாம். சென்னைநகரில் வஞ்சிரத்தின் விலை கிலோ எண்ணூறு ரூபாய், அதை வெட்டி விற்றால் கிலோ ஆயிரத்து இருநூறிலிருந்து ஆயிரத்து நானூறு வரைக்கும் விற்கிறது. இந்த வஞ்சிரமானது படுவஞ்சிரம், கோல்வஞ்சிரம், கீரிவஞ்சிரம் என் மூன்று வகைப்படும். மற்றவற்றை தவிர்த்து, கோல்வஞ்சிரமே, அதிகபட்சம் நான் பார்த்தவகையினில், நாற்பது கிலோ வரைக்கும் வளரக்கூடியது. இதை “மெளலாசி” என்று அழைப்பார்கள். வஞ்சிரம் மீனைப் பொறுத்தவரை கீரிவஞ்சிரம் அலாதிசுவை வாய்ந்தது. பெரிதான மெளலாசியில் கன்னியாகுமரி மீன்களுக்கு சுவை அதிகம். அரபிக்கடலுக்கு அந்தளவு மகத்துவம். இந்த வஞ்சிர மீனில் ஒமேகா3 என்ற சத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகம். இவையாவும் இதயத்துக்கு பலம் சேர்க்கக்கூடியது. ஆனால் வஞ்சிரம் என்ற பெயரில் “அரைகோலா மீனை” விற்பவர்கள் சிலர் இருக்கின்றனர். இந்த அரைகோலா பார்ப்பதற்கு அச்சுஅசல் வஞ்சிரத்தைப் போல இருக்கும். ஆனால் சுவையோ படுமட்டம்.
18251
காலா

கானாங்கெளுத்தி

கானாங்கத்தி அல்லது கானாங்கெளுத்தி மீனை உண்டிருப்பீர்கள். குறிப்பாக கேரளாவில் இது பிரசித்தம். இந்த மீனை அடிக்கடி உண்டுவந்தால் மனஅழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த இடத்தில் “காலா மீன்” [SALMON] பற்றி கூறியே ஆக வேண்டும். நம்மூர் காலாவைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், வெளிநாடுகளில் உள்ள காலாவைப் பற்றி ஒரு வீடியோவைப் பார்த்து அசந்து போனேன். கடலில் வாழும் இந்தக் காலாக்களின் தாய்வீடு சிலநூறு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஆறோ அல்லது அருவியோ! அவை குஞ்சு பொறிக்கும் காலம் வந்ததும் கடலில் நீந்தி, ஆற்றின் முகத்துவாரத்துக்கு வந்து, அதையும் கடந்து, பாறைகளின் மீதேறி, கடைசியில் தாம் பிறந்த இடத்துக்கு வந்து சேர்ந்து முட்டைகளைப் பொறிக்கின்றன. இங்கே வங்காள விரிகுடாவில் இருக்கும் இவ்வகையான மீன்கள் எங்கே சென்று குஞ்சு பொறிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்தான் கூறவேண்டும். இந்த காலாக்களைத் தின்று வந்தால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தவிர நூறு கிராம் காலா மீனில் அதே நூறுசதவீதம் வைட்டமின்-டி உள்ளது என்பது அதிகப்படியான ஆறுதல்.

நெத்திலி

நெத்திலி மீன் (ANCHOVY) இந்தப்பெயர் நெய்தோல் என்பது நெய்தோலியாகி பின் நெத்திலி ஆக மருவிவிட்டதாக, மீன்பிரியர் எழுத்தாளர் நாஞ்சில்நாடான் கூறுவார். இந்த மீனில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. முள் இருந்தாலும் அதையும் மென்று விழுங்கலாம். கொஞ்சம் அதிகப்படியாக உண்டால் உடலில் லேசாக உஷ்ணம் தட்டும். ஆனால் அதெல்லாம் கிடையாது என்று என் அம்மா கூறினார்கள். கூடவே இன்னொரு அரிதான தகவலையும் சொன்னார்கள். அதாவது மீனவக்குப்பங்களில் குழந்தையுடன் உள்ள தாய்மார்களின் இல்லங்களில் நெத்திலி மீனை சமையல் செய்யமாட்டார்கள். அப்படியே செய்தாலும் உண்டுவிட்டு மீதிக்குழம்பை குப்பையில் கொட்டிவிடுவார்கள்.
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE 18037
சங்குமுக கார்வா

சூரை

குழந்தைக்குப் பாலூட்டும் தாயானவள் அதீத ஆசைப்படும் நெத்திலிமீனை உண்டுவிட்டால், அதன் தலைமுடியைக் காட்டிலும் மெல்லிய முட்கள், நேராக பாலில் கலந்து குழந்தைக்கு வயிற்றுஉபாதையை உண்டு பண்ணிவிடும். இந்த நெத்திலியைப் பிடிக்கும்போது காக்காசீ என்ற பொடிமீன் கலந்து வரும். நூறு கிலோ நெத்திலியில் சுமார் பத்து கிலோ வரை இவை கலந்து வரும். காக்கைகூட சீ என்று போய்விடுமா எனத்தெரியாத இந்தமீனை அப்போது கீழே கொட்டிவிடுவார்கள். ஆனால் ஒரு வருடத்துக்கு முன் காரைக்காலில் ஒரு ஓட்டலில் உணவு உண்டபோது இதை தட்டுநிறைய சுடச்சுட கொண்டுவந்து வைத்தபோது அதன் சுவை பிரமாதம்.

சூரை மீனைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இதில் வெள்ளரா சூரை, ரத்த சூரை என்று இருவகை உண்டு. ஆங்கிலத்தில் இதை டீயூனா (YELLOW FIN TUNA) என்றழைப்பார்கள். ரத்த சூரையானது பார்ப்பதற்கு குட்டி வஞ்சிரம் போலவே இருக்கும். அதை அரிந்தால், உள்ளிருக்கும் சதைமுழுவதும் செக்கசெவேலென்று இருக்கும். இந்த மீனிலிருந்துதான் சிங்களவருக்கு விருப்பமான “மாசிக் கருவாட்டை” தயார் செய்கின்றனர். ஆராய்ச்சியாளரெல்லாம் தேவையில்லை. இதிலிருக்கும் நூறு சதவிகிதம் புரதச்சத்தைப்பற்றிக்கூற; மெரினா குப்பத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், பத்து வருடங்களுக்கு முன் இந்திய அளவில் ஆணழகர்; சில திரைப்பட நடிகர்களுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரின் உடற்பயிற்சிக்கூடத்தில் நான் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல்; அப்போதைய பம்பாயில் நடந்த ஆணழகன் போட்டியின்போது, மற்றெல்லா ஆணழகர்களும் ஸ்டீராய்ட் என்ற மருந்து ஊசி, இறைச்சி என்றெல்லாம் போய்க்கொண்டிருக்க, இவர் மட்டும் அந்த ஒருமாதகாலம் மேற்சொன்ன ரத்தசூரை மீனையே சாப்பிட்டு, உடலை நன்றாக முறுக்கேற்றி, போட்டியில் சொல்லத்தகுந்த இடத்தைப் பெற்றிருக்கிறார்.

சுறா

மனிதனாகப் பிறந்தவர் யாரென்றாலும் தலைவலி, மூக்கடைப்பு, ஜலதோஷம் என்று வந்துவிட்டால் தொல்லைதான். அப்போதெல்லாம் என் வீட்டில் காரப்பொடி என்ற சிறுமீன்களைப் போட்டு மிளகு ஏராளமாக சேர்த்து நீர்க்க குழம்பு வைத்தால் பிறகு அந்த தொல்லைகள் போயே போச்சு! இதனுடன் சுதும்பு எனும் குதிப்பு எனும் கலங்கரை விளக்க மீனும் உள்ளடக்கம்.

சுறாக்களில் சுமார் நான் கேள்விப்பட்டவரை எழுப்பத்தைந்து வகைகள் உண்டு. பால்சுறா, அடுக்குப்பல் சுறா, வேளா சுறா, ஆத்துமட்டை, கொம்பன் சுறா, உளுவை, செஞ்சுறா, படங்கான், சிங்கப்பல் சுறா, குயின் சுறா முதலானவை அவற்றில் சிலவாகும். சுறாவை புட்டு செய்வார்கள் அல்லது மிளகு குழம்பு வைப்பார்கள். சிலர் வறுக்கவும் செய்வார்கள். சுறாவில் அதன் எலும்புகளும் பல்லில் பட்டால் பொடிப்பொடியாக உதிர்ந்து ஜீரணமாகிவிடும். கொழுப்பே இல்லாதது. தாய்மாருக்கு பால் அதிகம் சுரக்கவில்லையெனில் பால்சுறாவில் குழம்பு வைத்துத் தருவார்கள். அதிலும் வேகாத சுறாக்கள் உண்டு. ஆட்டுக்கறி வாங்கும்போது கிடாஆடாகவே பார்த்து வாங்குகிறோம்.
18381
சங்கரா

கோழியில் பெட்டைக்கோழியாகவே பார்த்து வாங்குகிறோம். அதேபோல் சுறாக்களிலும் பெண்சுறாக்களையே வாங்கவேண்டும். இல்லையென்றால் குக்கரில் வேக ஒருநாள் பிடிக்கும்! சுறாவைப் பற்றி சொன்னால் கூடவே திருக்கை மீனையும் பற்றிக்கூறவேண்டும். இந்த மீனையும் ஏறத்தாழ சுறாவைப் போலவே பயன்படுத்தலாம்.

வேகாத மீனைப்பற்றி சொன்னேன், அத்துடன் “உதடி” என்ற மீனையும் சேர்த்துக்கொள்ளலாம். கொடுவா மீனில் எனக்குத் தெரிந்து சுமார் பத்துவகை உண்டு. அசல் கொடுவா, கொருக்கை, கல்கொடுவா, கூரை கத்தலை, பொன்னாங்கண்ணி இவற்றோடு மேற்சொன்ன உதடி வகையும் உண்டு. சமைத்துச் சாப்பிட்டால் அன்று முழுக்க சூயிங்கம் போல் மென்றுகொண்டிருக்க வேண்டியதுதான்.

பாறை – கடமா

பாறை மீனில் ஏராளமான வகை உண்டு. தேங்காய்ப்பாறை, செங்கட்டான் பாறை, சொரி பாறை, முயல் பாறை, உருட்டாம் பாறை, முதக்கொண்டை பாறை, நாமப் பாறை போன்றவை. இதில் ருசியில் தேங்காய்ப்பாறைக்கே முதலிடம், அடுத்து முயல்பாறைக்கு தனியிடம். ஏனென்றால் இந்த வகை மீன் மார்க்கெட்டுக்கே வராது. வியாபாரிகளே பங்கு போட்டுக்கொள்வார்கள். இதன் ருசி படுபிரமாதம்; சாப்பிடுவதும் தெரியாது, ஜீரணமாவதும் தெரியாது. இதன் சதை பச்சைக்குழந்தையின் கன்னமென படுமென்மையாக இருக்கும். சொரி பாறை என்ற ஒரே ஒரு மீனை சாப்பிட்டாலே உடல் சூடு ஏற்பட்டு கண்கள் சிவந்துபோகும். நான் ஒரேமுறைதான் சாப்பிட்டேன்… அதற்கே கண்கள் பொங்கிவிட்டன.
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88 18044
தேங்காய் பாறை

கடமா அல்லது கணவாய்களில் ஊசிகடமா முட்டைக்கடமா மற்றும் பேய்க்கடமா போன்றவை உள்ளன. பேய்க்கடமா என்பது நாம் கடலில் காணும் ஆக்டோபஸி வகையில் சிறுஅளவிலானது. முட்டைக்கடமா என்பது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது, தின்றால் ரப்பர் மாதிரி இருக்கும். இவற்றில் ஊசிகடமாவே தின்பதற்கு ஏற்றது. எலும்பும் முள்ளும் தோலுமற்ற இதைத் தின்ன கோடிகொடுத்தாலும் தகும். ஆனால் இதில் ஏதேனும் மருத்துவக்குணம் இருக்குமா என்று தெரியாது.

வவ்வால்

வவ்வால் மீனை (POMFRET) தெரியுந்தானே! தெரியாவிட்டால் உடனே போய் தெரிந்து கொள்ளுங்கள், கூடியவிரைவில் இவ்வகை மீன் இணையத்தில் புத்தகங்களில் போட்டோக்களாக மட்டும்தான் கிடைக்கக்கூடும். கறுப்பு, வெள்ளை என இரண்டு வகை உண்டு. பின் மோவான் எனப்படும் சைனீஸ் வெண்ணிற வவ்வாலும் இதில் அடங்கும். ஐந்து கிலோ எடை வரை இந்த மீனைப்பார்த்திருக்கிறேன். முதலில் வெள்ளை வவ்வாலும், மோவானும் பறிபோனது. இப்போது கறுப்பு வவ்வாலும் பறிபோகிறது. எல்லாம் ஏற்றுமதிதான்! முற்காலத்தில் வவ்வாலைப் பிடிக்கும் முறையைக் கேட்டாலே நெஞ்சு சிலிர்க்கும்!
(%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%B5%E0%AE%95%E0%AF%88) 18055
வவ்வால் வகை

முதலில், கடலின் மேலே வவ்வால் இருக்கும் இடத்தை அடைந்து, அதன்மேலே தென்னைஓலையை பரப்புவார்கள். மேலே நிழலைப்பார்த்ததும் கீழே வவ்வால் கூட்டமாக வரும். உடனே கயிறு கட்டிக்கொண்டு வலையுடன் ஒரு ஆள் கடலுக்குள் குதிப்பான். கயிறின் மறுநுனி அவன் மனைவியின் தம்பியிடத்தில் இருக்கும். கடலுக்குள் குதித்தவன் முன்னாடி வலையை விட்டுக்கொண்டே நீந்திப்போக, ஏதுமறியா வவ்வால்களின் கூட்டம் அவனைப் பின்தொடர்ந்து சென்று வலைக்குள் மாட்டிக்கொள்ளும். ஏறத்தாழ மூச்சற்றுப்போய் அவன் கயிறை அசைக்க, அக்காளின் தாலியை மனதில்கொண்டு, சடசடவென கயிறை மச்சான்காரன் இழுப்பான். வவ்வாலின் ருசியும் தனிரகம்! எல்லா மீன்களிலும் கழிவுகள் முப்பது சதவிகிதம் என்றால் இதில் கழிவு பத்துசதவிகிதம்தான்! பொதுவாக மீன்களை சூடாகவே சாப்பிடவேண்டும் என்பது விதி. அதிலும் இந்த வவ்வால்மீனுக்கே முதலிடம்!

கிழங்கான்

கடலில் கிடைக்கும் சங்கு, சிப்பி, ஆளி போன்றவை மனிதனுக்கு வரக்கூடிய மூலவியாதிகளை வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உண்டு. மீறி வந்துவிட்டாலும் அவற்றைக் குணப்படுத்தும் சக்தி படைத்தது. அவ்வளவு குளிர்ச்சி! இந்தக் குளிர்ச்சிக்கு நேரெதிராக நண்டு இனங்கள். நான்கைந்து சாப்பிட்டால் போதும், உங்களை பாத்ரூமுக்கு ஓடவைக்கும்.
18382
கிழங்கான்

கிழங்கான் (LADY FISH) ஒரு அழகான மீன். இது ஆண்மை பலப்பட செய்யக்கூடியது என ராமேஸ்வரம் பகுதியில் நம்பப்படுகிறது. இது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால், சென்னை சுற்றுப்புறபகுதிகளில் “தும்பிலி என்ற மீனை கிழங்கான் என்று சொல்லி விற்கிறார்கள். இருந்தாலும் தும்பிலியும் நல்ல சதைப்பற்றான மீன்தான்! என்ன… அதன் வாசனை சற்று கூடுதலாகவே வீசும்.

மீன்களில் உயர்ரக புரதம், அயோடின், நல்ல கொழுப்பு என உடலை செயல்பட வைக்கும் வைட்டமின்-டி, ஒமேகா-3 மற்றும் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் இலவசமாக கிடைக்கும். மீன்களை, ஒருகாலத்தில் என் தாயார், ஒரு நோயை வரவிடாமலும் அல்லது வந்த நோயை தீர்ப்பதிலும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் தகுந்தாற்போல் தினமும் சுவையாக சமைத்துத் தருவார்! அது அந்தக்காலம் பொற்காலம்! இப்போது?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button