மருத்துவ குறிப்பு

உப்பு, கிராம்பு, எலுமிச்சை எல்லாம் வேண்டாம், பல்லு நல்லா இருக்க இதுவே போதும்!!!

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி, நாலும், ரெண்டும் சொல்லுக்கு உறுதி என்பது தமிழில் நாம் அறிந்த பரிச்சயமான பழமொழி. ஆனால், இதன் பொருள் என்வென்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் பல்லுக்கு உறுதி மற்றும், நாலடிகள் கொண்ட நாலடியாரும், இரண்டு அடிகள் கொண்ட திருக்குறளும், நல்ல சொல்லுக்கு உறுதி என்பது இந்த பழமொழியின் பொருளாகும்.

இன்று உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா? கிராம்பு இருக்கா? எலுமிச்சை இருக்கா? என வெறும் இரசாயனப் பொருட்களின் கலப்பை கொண்டு மட்டுமே விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றன பெருநிறுவனங்கள்.

ஆனால், முந்தைய காலத்தில் எந்த பேஸ்ட்டும், டூத்ப்ரஷும் இன்றியே நமது முன்னோர்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருந்தனர். அந்த வகையில் அவர்கள் பயன்படுத்திய பல வகை பல் தேய்க்கும் குச்சிகளும், அதன் பயன்களும் பற்றி இனி காணலாம்….

பல் வலிக்கு தீர்வு தீராத பல் வலிக்கு தீர்வுக் காண நமது முன்னோர்கள் எருக்கு குச்சிகளை கொண்டு பல் துலக்கி வந்துள்ளனர்.

குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு குழந்தைகளுக்கு பற்கள் நன்கு ஆரோக்கியமாக வளர நாயுருவி குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல் வியாதிகள் நீங்க பல் சார்ந்த வியாதிகளுக்கு தீர்வுக் காண கருங்காலி குச்சிகள் பயன்படுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள்.

வாய் துர்நாற்றம் குறைய
புங்கு மற்றும் சம்பகம் எனும் குச்சிகளை வாய் துர்நாற்றத்தில் இருந்து தீர்வுக் காண பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள்.

வாய் புண்கள் சரியாக ஆலகுச்சிகளை வாய்ப்புண்களை அகற்றி பற்களை வலுப்படுத்த பயப்படுதியுள்ளனர். பெரும்பாலும் ஆலகுச்சிகளை தான் தினந்தோறும் பல் துலக்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பற்களை சுத்தம் செய்ய பற்களில் படிந்திருக்கும் கரையை அகற்ற அல்லது சுத்தம் செய்ய மருது குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது

வாயை சுத்தம் செய்ய புரசு மர குச்சிகள் வாயை சுத்தம் செய்ய பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வேம்பு ருசியளிக்கும் திறனை அதிகரிக்க வேம்பு குச்சிகள் பயன்படுத்தப்பட்டதாம்.

பல் கூச்சம் குறைய சிலருக்கு குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உண்ண முடியாது. சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்படும். இந்த பல் கூச்சத்தை போக்க அரச மர குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பற்கள் பளிச்சிட பற்கள் நன்கு வெள்ளையாக பளிச்சென்று இருக்க கருவேலம் மர குச்சிகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஸரள தேவதாரு பற்கள் நன்கு வலிமையாக இருக்கு, ஸரள தேவதாரு எனும் குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

08 1441686396 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button