மருத்துவ குறிப்பு

மஞ்சள் பற்கள் மற்றும் ஈறு நோய்களைப் போக்க, தினமும் இத கொண்டு பல் துலக்குங்க…

தற்போது என்ன தான் பலவிதமான டூத் பேஸ்ட்டுகள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவற்றில் ஏராளமான தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் உள்ளன. இதனால் இவற்றைக் கொண்டு அன்றாடம் பற்களைத் துலக்கும் போது, அது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

ஆனால் நம் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் மற்றும் ஈறு நோய்களைப் போக்க, நாம் வீட்டிலேயே டூத் பேஸ்ட்டை தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்த டூத் பேஸ்ட் தயாரிப்பதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இதனால் அதிக பணம் செலவழிக்கத் தேவையில்லை.
சரி, இப்போது அந்த நேச்சுரல் டூத் பேஸ்ட்டை எப்படி செய்வதென்று காண்போம். அவற்றைப் படித்து அதை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்போன்றவற்றை அழிக்கும்.

வேப்பிலை பவுடர்
வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது. வேப்பிலையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். அக்காலத்தில் கூட பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சிகளைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீங்குவதோடு, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் புத்துணர்ச்சியுடனும் துர்நாற்றமின்றியும் இருக்கும். நாம் இப்போது தயாரிக்கப் போகும் டூத் பேஸ்ட்டிலும் வேப்பிலை தான் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சரி, இப்போது அந்த பேஸ்ட்டை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்: வேப்பிலை பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை: முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அறைவெப்ப நிலையில் வைக்க வேண்டும்.

நன்மைகள் இந்த நேச்சுரல் டூத் பேஸ்ட்டில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. அதோடு இந்த பேஸ்ட்டில் ஃபுளூரைடு இல்லை. இந்த பேஸ்ட்டைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கினால், பற்களை வெண்மையாவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குறிப்பு இந்த டூத் பேஸ்ட்டைக் கொண்டு தினமும் காலை மற்றும் இரவில் பற்களைத் துலக்கி வந்தால், வாயில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி, வாயின் ஆரோக்கியம் மேம்படும்.

teeth 20 1482213574

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button