கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்திலும் மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம்

கர்ப்பகாலத்தில் பழைய உடை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்களும் சவுகரியமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம்வர முடியும்.

கர்ப்ப காலத்திலும் மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம்
இளம் பெண்களுக்கு கர்ப்பகாலம் மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. சாதாரண காலத்தில் விரும்பிய உடை எல்லாம் அணிந்து அழகாக வலம் வந்த அவர்கள் கர்ப்பகாலத்தில் பல மாதங்களாக ஒரே மாதிரியான தொளதொள உடைகளை அணிந்து நொந்துதான் போகிறார்கள்.

அந்த மாதிரியான பழைய உடை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்களும் சவுகரியமாக மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம்வர முடியும். நீங்களும் கர்ப்பிணிகள் என்றால், பொருத்தமான மாடர்ன் உடைகளில் ஜொலிக்கலாம். இதோ உங்களுக்கான உடைகள்!

மேக்சி டிரஸ் :

கர்ப்பிணிகள் பயணம் செய்யும்போது இதை பயன்படுத்திக்கொள்ளலாம். சுகமான பயணத்திற்கு ஏற்ற சூப்பரான உடை இது. அவுட்டிங் செல்லும்போதும், கடற்கரைகளில் நடக்கும் போதும் மேக்சி நன்றாகவே கைகொடுக்கும். இந்த உடையில் வித்தியாசமாக காட்சியளிக்க விரும்பு கிறவர்கள் மேக்சிக்கு மேல் பகுதியில் சிறிய ‘பெல்ட்’ அணிந்துகொள்ளலாம்.

ஜம்ப் சூட் :

அதிக பேஷனை விரும்பும் கர்ப்பிணிகள் இதனை ‘கேஷூவல் வெயர்’ ஆக அணிந்துகொள்ளலாம். ஜம்ப் சூட்டுடன் டிசர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்துகொண்டால், வித்தியாசமான அழகுடன் திகழமுடியும். சற்று குண்டாகத் தெரியும் கர்ப்பிணிகள் கறுப்பு நிறத்திலான ஜம்ப் சூட்டினை அணிந்தால், தோற்றம் சற்று ஒல்லியாகத் தெரியும்.

ஷிப்ட் டிரஸ் :

பொதுவாக கர்ப்பிணிகளுக்கு கவுன் மாடல் உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட ஷிப்ட் டிரஸ்களும் பொருத்தமாக அமையும். இந்த உடைகளில் வித்தியாசமான நிறங்களும், டிசைன்களும் கொண்டவைகளை பெண்கள் தேர்ந் தெடுக்கவேண்டும். அகலம் அதிகமுள்ள நெக் உடைகள் அழகாக இருக்கும். ஷிபான் மெட்டீரியலில் அமைந்த ‘ஒன் பீஸ்’ உடை, கர்ப்பிணிகளுக்கு பொருத்த மாக இருக்கும்.

ரைப் டிரஸ் :

இந்த வகை உடைகள் கர்ப்பிணிகளுக்கு ‘ரிச் லுக்’ கொடுக்கும். சவுகரிய மாகவும் இருக்கும். கர்ப்பகாலத்திலும், பிரசவத்திற்கு பின்பும் இதனை அணிந்து கொள்ளலாம். இது ஒருவகை அட்ஜஸ்ட்டபுள் டிரஸ் ஆகும். இது போல் டியூனிக் வகை உடைகளும் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

201705090945024186 You can also wear modern clothes in pregnancy SECVPF

ஸ்கர்ட் :

கர்ப்பிணிகளுக்கு கேஷூவல் லுக் கிடைக்க வயிற்றுக்கு மேல் அணியும் விதத்திலான ஸ்கர்ட் நன்றாக இருக்கும். வயிறு பெரிதாகுவதற்கு ஏற்ப இதை பெரிதாக்கிக்கொள்ளும் வசதியும் இருக் கிறது. அதற்கு பொருத்தமாக டெனீம் ஜாக்கெட் அணிந்தால் அழகான தோற்றம் கிடைக்கும்.

மெட்டர்னிட்டி ஜீன்ஸ் :

வழக்கமாக அணியும் இறுக்கமான ஜீன்சை கர்ப்பகாலத்தில் அணிய முடியாது. அதற்கு மாற்றாக கர்ப்பிணிகளே அணியக்கூடிய மெட்டர்னிட்டி ஜீன்ஸ் உள்ளன. நெகிழக்கூடிய மெட்டீரியலைக் கொண்டு இது தயார் செய்யப்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் அணிந்துகொள்ள இது சவுகரியமாக இருக்கும். ப்ளேயர்டு டாப் அணிந்துகொண்டால் வயிறு பெரிதாக இருப்பது தெரியாது.

பல ‘ஷேடு’களை கொண்ட லெகிங்குகளையும் கர்ப்பிணிகள் அணியலாம். அதற்கு நீளமான டாப் மற்றும் டியூனிக் மாடல் மேலாடைகளையும், குர்த்திகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சிகரெட் பேண்ட், பேரலல் பேண்ட், லூஸ் பேண்ட் போன்றவைகளையும் கர்ப்பிணிகள் அணியலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button