கால்கள் பராமரிப்பு

பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?

உங்கள் பாதங்களை மிகவும் சுத்தமாகவும் ஈரம் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பாதங்களையும் தினந்தோறும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?
உங்கள் பாதங்களை மிகவும் சுத்தமாகவும் ஈரம் படாமலும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பாதங்களையும் தினந்தோறும் பரிசோதித்துக் கொள்ளுங்கள். கால் விரல்களுக்கு இடையிலும் கூட… தேவையெனில் வேறு யாராவது ஒருவரின் உதவியை நாடுங்கள். பாதங்களின் கீழ்ப்பகுதியைப் பார்க்க நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்தலாம். உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது பாதங்களை பரிசோதிக்குமாறு கூறுங்கள்.

வீக்கமாக உள்ள அல்லது சிவந்து போய் இருக்கும் பகுதிகள், வெடிப்புகள், வெட்டுகள் அல்லது சிராய்ப்புகள், வறண்டு போன சருமத் தழும்புகள், ஜில்லென்று குளிர்வாக உள்ள பகுதிகள் (ரத்த ஓட்டம் தாழ்வாக இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது) அல்லது மிகவும் சூடாக இருக்கும் பகுதிகள் (உடலின் அப்பகுதி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது) என ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பாதங்களை தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீரில் (சுடுநீர் வேண்டாம்) நன்றாக சோப்பு போட்டு கழுவவும். குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாதபடி நன்றாக துடைத்து பாதங்களை உலர விடுங்கள். தினமும் இருமுறை உங்கள் ஷூக்களை சோதித்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது ஒரு பொருள் இல்லாதபடி ஷூக்களை மேலும் கீழுமாக கவிழ்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

201705081355516802 How to take better care of the feet SECVPF

நன்றாக பொருந்தும் ஷூ, சாக்ஸ்களை மட்டுமே அணியுங்கள். ஒரு போதும் வெறும் காலோடு நடக்க வேண்டாம். கால்விரல் நகங்கள் வளரும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். விரல் நகங்களை நேர் குறுக்காக வெட்டவும். நகங்கள் தடிமனாகவும், வளைந்தும் இருந்தால் அல்லது உங்களுக்கு பார்வைக் கோளாறு இருந்தால் வேறு யாரையாவது நகங்களை ஒழுங்காக வெட்ட உதவும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

சுடுநீரால் ஏற்படும் தீப்புண், நடைபாதை, மணல், சுடுநீர் பாட்டில்கள் மற்றும் ஹீட்டிங் பேடுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். சூட்டையோ அல்லது தீப்புண்ணையோ உங்களால் உணர முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கால் ஆணி அல்லது பாதங்களில் தடிமனாகிப் போய் விட்ட தோலை நீங்களாகவே வெட்டி எறிய முயற்சிக்க வேண்டாம். இந்த தொல்லைகளுக்கு பொடியாட்ரிஸ்ட் எனப்படும் பாத நிபுணரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைப் பெறவும்.

பாதங்களில் சீழ்ப்புண் அல்லது வெளியே தெரியக்கூடிய வகையில் புண், வெட்டுப்பட்ட காயம் அல்லது கொப்புளத்தில் தொற்றுநோய், கால்விரல் சிவந்து மென்மையான நிலை, உணர்வில் மாற்றம் அதாவது, வலி, நடுக்கம், மரத்துப் போய்விட்ட நிலை அல்லது எரிச்சல், பாதங்களை நீங்கள் பார்க்கும் போது ஏதாவது மாற்றம் ஏதாவது வெடிப்புகள் காயங்கள் தென்பட்டால் நீரிழிவு மருத்துவர் அல்லது பொடியாட்ரிஸ்ட்டை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button