மருத்துவ குறிப்பு

உங்கள் குழந்தை உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்னவென்று தெரியுமா?

அனைத்தும் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை கூர்ந்து கவனித்தால், சில நேரங்களில் சமாளிப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ள சவாலான சில பிரச்சனைகளை நாம் காணலாம். இந்த சூழ்நிலைகள் சமாளிக்க முடியாதவைகள் இல்லை தான் என்றாலும் கூட, அவற்றை சற்று தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இப்படி பல விஷயங்களில், குழந்தைகளைப் பராமரித்து வளர்க்க வேண்டிய பெற்றோரின் பொறுப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். சேட்டிலைட் கேபிள் வலையமைப்புகள், கைப்பேசிகள், மற்றும் இதர ஊடக கருவிகள் ஆகியவைகள் குழந்தைகளின் மீது, அவர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தங்களின் சொந்த புரிதல்களுடன் அவர்கள் வளர்வதால், தங்களுக்கே அது தீமையாக வந்து சேர்கிறது.

இருப்பினும், குழந்தைகளை வளர்க்கும் போது, குறிப்பிட்ட சில விஷயங்கள் மீது நீங்கள் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தேதியில் குழந்தைகள் எல்லாம் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக உள்ளார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம இருந்து எதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை நீங்கக் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது நீங்கள் கவனம் செலுத்த தொடங்கினால், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் என்ன என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை சுலபமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இருப்பினும், சூழ்நிலைகளை கையாள உலகியலுக்குத் தக்கவாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டியது முற்றிலும் உண்மையாகும். இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் கெட்டுப் போவதற்கு எண்ணிலடங்கா வாய்ப்புகள் உள்ளது. பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கீழ்கூறியவற்றை எதிர்ப்பார்க்கிறார்கள். இவற்றை குறித்துக் கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்ள முயற்சியுங்கள்:

நீங்கள் அவர்களுடன் நேரத்தை செலவு செய்ய எதிர்ப்பார்ப்பார்கள் இது மிகவும் இயற்கையான ஒரு கோரிக்கையே. பல சூழ்நிலைகளில், குழந்தைகள் தங்களது பெற்றோர்களை தான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள். உங்களிடம் இருந்து அவர்கள் பலவற்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதனால், உங்களுடன் அவர்கள் நேரம் செலவழிக்க விரும்புவார்கள். இன்னும் அதிகமாக சொல்ல வேண்டுமானால், இது மிகவும் செல்லுபடியாகும் கோரிக்கையாகும். அதனால் அதனை நேர்மறையான வழியில் நீங்கள் கையாள வேண்டும்.

அன்பையும் இரக்கத்தையும் எதிர்ப்பார்ப்பார்கள்
ஏற்கனவே சொன்னதை போல், குழந்தைகள் என்பவர்கள் இயற்கையாகவே உலகியலுக்குத் தக்கவாறு நடக்கிறவர்கள். அதனால் தான் அன்பு மற்றும் பாசம் இருந்தால், அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்ப்பார்க்கும் முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். அவர்களின் பெற்றோராக, அவர்களிடம் காதலையும், அன்பையும், இரக்கத்தையும் காட்டுவது உங்களது பொறுப்பாகும்.

உங்களது வழிகாட்டல் அவர்களுக்கு வேண்டும் உங்கள் வழிகாட்டல் உங்கள் குழந்தைகளுக்கு தொழில் ரீதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கும். இதனை குழந்தைகள் நன்கு அறிவார்கள். அதனால் தான் பெற்றோரின் வழிகாட்டல்களை அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். இந்த வழிகாட்டல் என்பது தீர்க்கமான காரணியாக அமையும்; குறிப்பாக, அவர்களாகவே முடிவெடுக்க கஷ்டப்படும் போது.

பள்ளி நிகழ்வுகளின் போது
நீங்கள் வருவதை எதிர்ப்பார்ப்பார்கள் பள்ளி நிகழ்வுகளில் குழந்தைகள் பங்கு கொள்ளும் போது, கூட்டத்தின் மத்தியில் தங்கள் பெற்றோரை காண்பது அவர்களுக்கு பெருமையை அளிக்கும். அவ்வகையான நிகழ்வுகளின் போது பெற்றோர்களை அங்கே குழந்தைகள் எதிர்ப்பார்ப்பார்கள். மேடையில் உங்கள் குழந்தைகள் ஏறுவது உங்களுக்கு பெருமையளிக்காதா என்ன? அப்படி ஆம் என்றால், கண்டிப்பாக அங்கே இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகளின் தேவையை நிறைவேற்றுங்கள்.

கதைகள் கேட்க விரும்புவார்கள் பழங்காலத்தில், இது தாத்தா பாட்டியின் பொறுப்பாக இருந்து வந்தது. இக்காலத்தில் பெற்றோர்களிடம் இருந்து கதைகள் கேட்க தான் பிள்ளைகள் அதிக ஆவலை காண்பிக்கிறார்கள். உங்களுக்கு நேரம் இருக்காது என்பது ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று தான். அதனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கதைகளைக் கூறுங்கள்.

ஒன்றாக சேர்ந்து சாப்பிட விரும்புவார்கள் "ஒன்றாக சேர்ந்து உண்ணும் குடும்பம், ஒன்றாக வாழும்" என்ற பொன்னான வாக்கு எப்போதுமே உண்மையாகும். பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் எதிர்ப்பார்க்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்களுக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தால் அதனை நிறைவேற்றுவதில் தவறேதும் இல்லை. கண்டிப்பாக அது குடும்ப உறவுகளை வலுப்படுத்தும். இப்படி பல்வேறு தேவைகள் இருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதில் நீங்கள் அலுத்துக் கொள்ளக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களுடன் புன்னகையோடு நீங்கள் பேச வேண்டும். அவர்கள் பிரச்சனைகளுடன் இருக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக விளங்க வேண்டும்.

10 1441867796 6 parents

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button