அழகு குறிப்புகள்

பருக்களைத் தடுப்பது எப்படி,tamil beauty tips for pimples

pimple_001

பருக்கள் ஏன் வருகின்றன?

சருமம் எண்ணெய் பசையுடன் இருப்பதற்கு காரணம், உடலில் சீபம் என்ற எண்ணெய் சுரப்பதுதான்.ஹார்மோன் பிரச்னையால் சிலருக்கு இந்த சீபம் மிக அதிகமாகச் சுரக்கும். இந்தச் சுரப்பிகளில் தடை ஏற்பட்டாலோ, சருமத்தில் சீபம் அதிகமாகச் சுரக்கும் போதோ, சிறு கட்டிகள் போல பருக்கள் உருவாகின்றன.

சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல்,மனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இன்மை, பொடுகுத் தொல்லை, காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துதல் போன்ற காரணங்களும் பருக்களை ஏற்படுத்துகின்றன.

எந்த வயதில் வரும்?

13 வயது முதல் 30 வயது வரை பருக்கள் வரலாம். இந்த வயதைக் கடந்த பிறகும், சிலருக்குப் பருக்கள் வரலாம். பெண்களுக்கு, மாதவிலக்கு சமயங்களில் மட்டும் பருக்கள்வந்து மறையும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் (PCOD) இருந்தாலும் பருக்கள் வரும்.

பருக்கள் எப்படி பரவுகின்றன?

முகத்தில் மூக்கு ஓரங்கள், தாடை, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் கறுப்பாகவோ, வெள்ளையாகவோ வரலாம். இதை ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்போம்.  சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றால் குருத்தாகத் தோன்றி, சீழ் பிடித்த கட்டிகளாக மாறுகின்றன. சிலருக்குப் பருக்கள் வலிக்கும்.  பருக்களை பிதுக்கி சீழ் எடுப்பது, அடிக்கடி தொட்டுப் பார்ப்பது, கிள்ளுவது போன்ற செயல்களால் பருக்கள் அதிகமாகும். சரும மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

பருக்களைத் தடுப்பது எப்படி?

சருமம் எண்ணெய் பசையா, வறண்ட சருமமா, நார்மலா எனப் பார்த்து, அதற்கான ஃபேஸ் வாஷ்களை வாங்கி, ஒரு நாளுக்கு  23 முறை முகத்தைக் கழுவலாம்.

முகத்தைக் குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்துக்கு எனத் தனியாக ஒரு துண்டைப் பயன்படுத்த வேண்டும். கொழுப்பு, எண்ணெய் உணவுகளுக்கு ‘தடா’ போடுவதன் மூலமும் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

இயற்கை முறையில் பருக்களைப் போக்கலாம்!

கொதிக்கும் நீரில் கொழுந்து வேப்பிலையைப் போட்டு ஆவிபிடிக்க வேண்டும். பிறகு, துண்டால் முகத்தை ஒற்றிஎடுத்து, குளிர்ந்த நீரால் கழுவலாம்.

புதினா, துளசி, வேப்பிலை, தலா நான்கு இலைகளை எடுத்து, இதனுடன் சிறிது மரிக்கொழுந்து சேர்த்து, சாறாக அரைத்து, கடலை மாவுடன் கலந்துகொள்ளவும். முகம், மூக்கு ஒரங்களில் இந்தச் சாறைப் பூசி, 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான நீரில் கழுவலாம்.

எங்கு பருக்கள் மிகுதியாக இருக்கிறதோ, அந்த இடத்தில், அரைத்த பூண்டு விழுதைப் பூசி,    15  நிமிடங்களுக்குப் பின் கழுவலாம்.  முகம் முழுவதும் தடவக் கூடாது.

லவங்கம்  2, மிளகு  2, முல்தானிமட்டி  அரை டீஸ்பூன் எடுத்து பேஸ்ட்டாக்கி, பருக்களின் மேல் தடவலாம்.

ரோஜா இதழ்களை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து, ஆறவைக்கவும். இந்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, அடிக்கடி எடுத்து முகம் கழுவலாம். பருக்கள் வராது. முகத்திலும் பொலிவு கூடும்.

கொட்டைகள் நீக்கப்பட்ட தக்காளிச் சாறு  2 ஸ்பூன், ஜாதிக்காய்த் தூள், மாசிக்காய்த் தூள்  தலா 1 டீஸ்பூன், சந்தனத்தூள்  2 சிட்டிகை இவற்றை கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும்.

பயத்த மாவு  ஒரு டீஸ்பூன், எலுமிச்சை இலை  2, வேப்பிலை  1, கஸ்தூரி மஞ்சள்  அரை டீஸ்பூன் ஆகியவற்றை  அரைத்து, பன்னீருடன் கலந்து முகத்தில் பூசலாம்.

வெள்ளரிச் சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை சமஅளவில் எடுத்து, அதில் பார்லி பவுடர், முல்தானிமட்டி தலா 2 ஸ்பூன் கலந்து, மிக்ஸியில் அரைத்து, பருக்கள் வந்த இடங்களில் அடர்த்தியாகப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பருக்கள் மறையும்.  வராமலும், பரவாமலும் தடுக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button