மருத்துவ குறிப்பு

பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்

பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு தற்போது வரும் செய் திகளே ஆதாரம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவணைப்பும் கட்டாயமாக தேவை ப்படுகிறது.

பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்த கைய பாதுகாப்பான இடைவெளி யைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.

இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடி யும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத் திக்கிறோம், என்று சொல்லிக் கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. அதே போன்று வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டு பணிகளில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் அதிக நேரம் பெண் குழந்தைகளின் கவனிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கும், டியு+’னுக்கு செல்லும் போது மற்றவர்களின் துணையை நாடுவது ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரையில் பெண் குழந்தை களை தாய்மார்கள் அழைத்துச் சென்று வருவது பாதுகாப்பாகும்.

பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. இதனால் தேவையற்ற மன உளைச் சலுக்கு தள்ளப்பட்டு, எல்லா வி’ யங்களையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம்

தோன்றும். பெண் குழந்தைகளை தன்னுடைய மகளாக நினைக்காமல் தோழியாக கருதி, அனைத்து விட யங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ் வொரு வயது கால கட்டத்திலும் அந்த வயதில் வரும் பிரச்சனைகள் பற்றியும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிதர வேண்டும்.

மேலும் அறிமுகம் இல்லாத நபர் கள் பேசினால் அல்லது தொல்லை கொடுத்தால் அதனை உடனே தெரிவிக்க வேண்டும் என்பதையும் சொல்லி தரவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் பெண் குழந்தையை பாதுகாத்து, அரவ ணைத்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க லாம்.g 3

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button