கண்கள் பராமரிப்பு

கண்கள் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க சில டிப்ஸ்….

ஒருவரது அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அத்தகைய கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொண்டால் தான், அழகு மேம்பட்டு காணப்படும். கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்களைப் போக்கவும் பல இயற்கை வழிகள் உள்ளன.

இங்கு அவற்றில் சில கொடுக்கப்பட்டுள்ளன. சரி, இப்போது கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்வதற்கான சில வழிகளைக் காண்போம்.

டிப்ஸ் #1
தினமும் இரவில் படுக்கும் முன் 2 துளிகள் விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

டிப்ஸ் #2 கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விட வேண்டும்.

டிப்ஸ் #3 சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்கள் நீங்கும்.

டிப்ஸ் #4 தினமும் கண் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், கண் பார்வை மேம்படும்.

டிப்ஸ் #5 தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடம் அமர, கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும்.

டிப்ஸ் #6
உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்தாலும், கருவளையங்கள் நீங்கும்.

ximage1 01 1464759446 02 1464869007 30 1483085656

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button