சிற்றுண்டி வகைகள்

இஞ்சித் துவையல் வகைகள்!

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, புளி – நெல்லிக்காய் அளவு, வெல்லத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை 5 நிமிடம் வெந்நீரில் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு, இஞ்சியை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். சற்று ஆறியதும் இதனுடன் புளி, வெல்லம், உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து, நைஸாக அரைக்கவும்.

ஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கி, வறுத்த மிளகாய் வற்றலுடன் சேர்த்து வதக்கி புளி, உப்பு சேர்த்து அரைப்பதோடு, கொஞ்சம் வெல்லமும் சேர்த்தால் சுவையான இஞ்சித் துவையல் தயார். இது ஜீரணத்துக்கு நல்லது.
——————————————————————————————————————-

இஞ்சித் துவையல்
தேவையான பொருள்கள்:
இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

%25E0%25AE%2587%25E0%25AE%259E%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D
3333

செய்முறை:

  • இஞ்சியைத் தோல்சீவி, நன்றாகக் கழுவி, சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
  • இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
  • தேங்காயைத் துருவல், புளி, பச்சைமிளகாயைக் கலந்து ஆறவைக்கவும்
  • ஆறியதும், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

* வழக்கமாகச் சொல்வதுதான் என்றாலும்- காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். கல் உப்பு உபயோகிப்பது இன்னும் சுகம்.

* இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.
* விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.
* பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்லும்போது தேங்காயையும் நன்கு வதக்கியே அரைத்து எடுத்துச் செல்லலாம். சீக்கிரம் கெடாது.

இஞ்சித் துவையல் – முதல் வகை

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 2 டீ ஸ்பூன்
மிளகு – கால் டீ ஸ்பூன்
உப்பு  –  கால் டீ ஸ்பூன்
புளி  –  ஒரு கொட்டைப் பாக்கு அளவு
பெருங்காயம் – சிறிய துண்டு
இஞ்சி  –  50 கிராம்

செய்முறை

1. உளுத்தம் பருப்பு, மிளகு, பெருங்காயம், இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்.
2. இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கவும்.
3. புளியையும்,உப்பையும் சேர்த்து அரைக்கவும்.

துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
————————————————————————————————————————

இரண்டாம் வகை
தேவையான பொருட்கள்

கடுகு  – அரை டீ ஸ்பூன்
மிளகு – கால் டீ ஸ்பூன்
உப்பு  –  கால் டீ ஸ்பூன்
புளி  –  ஒரு கொட்டைப் பாக்கு அளவு
பெருங்காயம் – சிறிய துண்டு
இஞ்சி  –  50 கிராம்
வெல்லம் – 1 கொட்டைப்பாக்கு அளவு

செய்முறை

1. கடுகு, மிளகு, பெருங்காயம் இவற்றைச் சிறிது வறுத்துக் கொள்ளவும்.
2. இஞ்சியைத் துண்டாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
3. புளி, உப்பு சேர்த்து வெல்லம் வைத்து அரைக்கவும்.

இந்தத் துவையலை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
—————————————————————————————————————–

* இதை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.
———————————————————————————————————————-

தேவையானபொருட்கள்: இஞ்சி மிளகாய்வற்றல் தேங்காய்துருவல் புளி உப்பு தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு நல்லெண்ணெய் செய்முறை: வாணலியில்சிறிதுஎண்ணெய்விட்டுமிளகாய்வற்றல்சேர்த்துவறுக்கவும்.  தேங்காய்துருவலைநன்குபொன்நிறமாகவறுக்கவும்.  பின்பொடியாகநறுக்கியஇஞ்சியையும்நன்குவறுக்கவும்.  பின்மிக்ஸியில்வறுத்தமிளகாய்வற்றல், தேங்காய்துருவல், இஞ்சி, புளி, உப்புசேர்த்துநன்குஅரைக்கவும்.
பின்வாணலியில்சிறிதுஎண்ணெய்விட்டுகாய்ந்ததும்கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலைசேர்த்துதாளித்துஅரைத்தவிழுதைசேர்த்துகிளறிபரிமாறவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button