அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறதா,tamil ladies beauty tips

10372257_466529230143890_9119135876569915423_n

முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. ப்ளீச் செய்தும் பலனில்லை. இயற்கையான முறையில் இந்தப் பிரச்னையை சரி செய்ய வழி இருக்கிறதா? வழிகாட்டுகிறார் அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி… டீன் ஏஜ் பிள்ளைகள் அதிகம் சந்திக்கும் பிரச்னை இது. ஹார்மோன் குறைபாடு காரணமாக சிலருக்கு ரோம வளர்ச்சி அதிகம் இருக்கும். உடனடியாக டாக்டரிடம் கன்சல்ட் செய்து கொள்ளுங்கள். ப்ளீச் செய்வதால் முகத்தில் உள்ள ரோமத்தின் நிறம் மாறுமே தவிர, நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எந்தக் காரணத்துக்காகவும் ரிமூவர் கொண்டு ரோமம் நீக்க முயற்சி செய்ய வேண்டாம். பல மடங்கு அடர்த்தியுடன் முடி வளர்ந்து முகத்தை அசிங்கமாக்கிவிடும். ரோமத்தை எளிதாக நீக்க இயற்கையான வழிமுறை இருக்கிறது. குப்பைமேனி இலை, வசம்பு, வேப்பந்தளிர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, உலர வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையில் 2 டீஸ்பூன் எடுத்து திக் பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் தடவுங்கள். கொஞ்சம் உலர்ந்த உடன் ப்யூமிஸ் ஸ்டோன் வைத்து மேல் நோக்கி ஸ்க்ரப் செய்வது போல செய்யுங்கள். வாரம் ஒருநாள் செய்து வந்தால் ரோமங்கள் நீங்கி, முகம் பளிச் ஆகிவிடும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button