சரும பராமரிப்பு

சருமத்திற்கான சூப்பர் ஃபேஸ் வாஷ் எப்படி இயற்கை முறையில் தயாரிக்கலாம்?

உங்கள் சருமத்திற்கு எந்த ஃபேஸ் வாஷ் நல்லது என்பதை எப்படி அறிந்துகொள்வது? இது சுலபம்தான். முகத்தை கழுவியபிறகு சருமம் இழுவையாகவும் அழுத்தமாகவும் இருப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளைத் திட்டுக்கள் தோன்றியுள்ளதா? அப்படியானால் உங்களுடைய செயற்கை ஃபேஸ்வாஷை மாற்றி இயற்கை வழிமுறைக்கு நீங்கள் மாறவேண்டிய நேரம் இது

இந்த இயற்கை ஃபேஸ்வாஷில் சொல்லப்பட்டுள்ள உட்பொருட்கள் திரவ காஸ்டைல் சோப், சோற்றுக் கற்றாழை, ஜோஜோபா எண்ணெய், தேன் அல்லது ரோஸ்மரி எண்ணெய் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இந்த ஃபேஸ்வாஷ் ஒரு சராசரியான சருமத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். உங்கள் சருமத்திற்குப் பொருத்தமான குறிப்பை இங்கே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணமாக உங்களுக்கு எண்ணெய்பசை சருமம் என்றால் இதில் எண்ணெயை குறைத்துக் கொள்ளலாம் அல்லது வறண்ட சருமம என்றால் அதிகமாகவோ பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ்வாஷை நீங்களே படிப்படியாகச் செய்ய உதவும் செய்முறை இதோ:

படி#1: ஒரு கப் கொதிக்க வைத்த நீரை எடுத்து அதில் கால் கப் திரவ காஸ்டைல் சோப்பை சேர்க்கவும். முடந்தவரை முற்றிலும் இயற்கை எண்ணைகளைக் கொண்ட வேதிப்பொருட்களற்ற சோப்பை இதற்கு பயன்படுத்துவது நல்லது.

படி#2: அடுத்து இந்த கலவையில் இரண்டு டீஸ்பூன்கள் ஜோஜோபா எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெய் வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்து காணப்படுவதால் இவை சருமத்தை ஊட்டமளித்து பாதிப்புகளை சரி செய்து புதிய செல்கள் உற்பத்தியாவதை ஊக்குவிக்கிறது.

படி#3: இந்த கலவையில் இரண்டு டீஸ்பூன்கள் இயற்கையான தேனை சேர்க்கவும். தேனில் உள்ள அமினோ அமிலங்கள் சரும ஈரப்பதத்தை தக்கவைத்து வைட்டமின் சி பொன்னான பொலிவைத் தரும்.

படி#4: சோற்றுக் கற்றாழையின் தோலை நீக்கி அதில் உள்ள உட்பொருளை எடுக்கவும். அந்த ஜெல்லை இரு டேபிள் ஸ்பூன் அளவு மேற்சொன்ன கலவையில் சேர்க்கவும். கற்றாழை சருமத்தை ஆசுவாசப் படுத்தி மாசுக்களை நீக்கி சருமத்தை அதிமென்மையாக ஆக்குகிறது.

படி#5: பத்து துளிகள் ரோஸ்மரி எண்ணெயை இந்தக் கலவையுடன் சேர்க்கவும். ரோஸ்மரி எண்ணெய் தொற்றுக்களை எதிர்க்கும் தன்மையுடையது என்பதால் பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை கொன்று சருமத் துவாரங்களை திறக்கும்.

படி#6: அனைத்து பொருட்களையும் சேர்த்தபின் இந்த கலவையை நன்கு சீராக கலக்கவும். இப்போது உங்களுக்கு ஒரு நுரையுடன் கூடிய மூட்டமான திரவம் கிடைக்கும். இதை ஒரு டிஸ்பென்சரில் மாற்றி குளிர்ந்த உலர்ந்த பகுதியில் பத்திரப்படுத்தவேண்டும்.

படி#7: உங்கள் முகத்தை சுத்தப்படுத்தடிஸ்பென்சர் மூலம் இருமுறை அழுத்தி பெறப்படும் இந்த கலவை போதும். காஸ்டைல் சோப்பு மிகவும் அடர்த்தியானது என்பதால் இதை அதிகம் பயன்படுத்தவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. இல்லையெனறால் உங்கள் சருமம் வறண்டுவிடக்கூடிய வாய்ப்புண்டு.

படி#8: உங்கள் முகத்தில் இந்த கலவையை சுழற்சியாக ஐந்து நிமிடம் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். சருமத் துவாரங்களை மூடுவதற்கு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

நினைவில் கொள்ளவேண்டியவை இந்த கலவையை பயன்படுத்தும் முன் நன்கு குலுக்கிய பின் பயன்படுத்தவும். ஒரு மாதத்திற்குப் பிறகு மீதம் இருந்தால் அதை பயன்படுத்தவேண்டாம். இந்த கலவையில் இயற்கைக்கு மாறான வாடை அல்லது திரவத்தின் தன்மையில் மாற்றம் கண்டால் அதை பயன்படுத்த வேண்டாம். இதை ஒரு நாளில் இருமுறை உபயோகியுங்கள்.

02 1483355076 9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button