முகப் பராமரிப்பு

பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?

பாடிவாஷை எப்படிப் பயன்படுத்துவது, யாரெல்லாம் பயன்படுத்தலாம், முகத்திற்கு பயன்படுத்தலாமா? என்ற கேள்விகளுக்கான விடையை இப்போது பார்க்கலாம்.

பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?
பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாடிவாஷ் பயன்படுத்தலாம். தேவையான அளவு பாடிவாஷை கப்பிலோ, கையிலோ ஊற்றிக்கொண்டு, தன் கைகளாலேயே உடல் முழுவதும் பூசி, தேய்த்துக் குளிக்கலாம். சில பாடிவாஷ்களில் சின்னச் சின்ன உருண்டைகள் போன்று சேர்ந்து வரும். அது சருமத்துக்கும் கேடு; சூழலுக்கும் கேடு. இதை அவசியம் தவிர்க்க வேண்டும். மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்கும் பாடிவாஷ், வாசனை குறைவான பாடிவாஷ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

உலர் சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அதே சமயம் வாசனை இல்லாத பாடிவாஷாகவும் இருக்க வேண்டும். 0-6 வயதுள்ள குழந்தைகளுக்கென பிரத்யேகமாக நறுமணம் சேர்க்காத பாடிவாஷ் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தலாம். தேங்காய்ப்பால், பட்டர், ஆலிவ், கற்றாழை போன்றவை கலந்த பாடிவாஷ் சிறந்தவை.

பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?

சருமம், எண்ணெய் பசையானது, வறண்டது, இரண்டும் கலந்தது (காம்பினேஷன்), நார்மலானது என நான்கு வகைப்படும். முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை இருப்போர், எண்ணெய்ப் பசை நீக்கும் ஃபேஸ் வாஷ் மற்றும் உடலுக்கு பாடிவாஷ் பயன்படுத்தலாம்.

வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம் இருப்பவர்கள் அவர்களது சருமத்துக்கேற்ற ஃபேஸ்வாஷ் அல்லது பாடிவாஷையே கூட முகத்துக்கும் பயன்படுத்தலாம்.

நார்மல் சருமம் கொண்டவர்கள், பாடிவாஷ் மட்டும் பயன்படுத்தினாலே போதும். விருப்பப்பட்டால் மட்டும், முகத்துக்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்துங்கள்.201705171146583114 body wash use face for women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button