கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு செல்போனால் ஆபத்து

கர்ப்பிணிகள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள் நலனுக்கும், மொபைல்போனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதே போல் 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது தெரியவந்தது.

முரட்டுத்தனம் அதிகரிப்பு: ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுத்தல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரியவந்துள்ளதாக ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியுள்ளார். இதனை அந்த குழந்தைகளில் பெற்றோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் மொபைல்போனை பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்புள்ளது. என்று கண்டறியப்பட்டுள்ளது. pregnant

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button