மருத்துவ குறிப்பு

அலுவலக பணிகளில் பெண்களின் பங்கு

நவீன காலத்தில் பெண்கள் பல புதிய துறைகளில் நுழைந்து தங்களுக்கான ஓர் தனித்துவத்தை உண்டாக்கிக் கொள்கின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அலுவலக பணிகளில் பெண்களின் பங்கு
பெண்கள் முந்தைய காலத்தில் நான்கு நிலைகளிலேயே தொடர்ச்சியாக இருந்து வந்தனர். அதாவது மகள், மனைவி, இல்லத்தரசி மற்றும் தாய் என்பதாகும். பெண்கள் என்பதின் ஒட்டுமொத்த பங்கு மற்றும் நிலை என்பது சமூகத்தில் நன்கு வரையறுக்கப்பட்டதால் உறுதியாய் இருந்தன. ஆனால் இன்று அனுபவரீதியில் நாம் பல மாற்றங்களை காண்கிறோம்.

நவீன காலத்தில் பெண்கள் பல புதிய துறைகளில் நுழைந்து தங்களுக்கான ஓர் தனித்துவத்தை உண்டாக்கிக் கொள்கின்றனர். அரசியல், பொருளாதார, சமூக பணிகளில் தங்கள் பணியை மேற்கொள்கின்றனர். தற்கால பெண்கள் பொதுவாகவே உயர்கல்வியை பெற்று வருவதால் அடுத்த தலைமுறைக்கும் அதனை தருகின்றனர். இன்றைய சூழலில் குடும்பத்தின் தவிர்க்க முடியாத ஓர் பொருளாதார சக்தியாகவும் திகழ்கின்றனர்.

1998-ல் 500 நிறுவனங்கலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மிக சக்தி வாய்ந்த பெண்மணிகளாக 2 நபர்கள் மட்டுமே கண்டறியப்பட்டனர். 2011-ல் 15 சி.இ.ஓ-க்கள் என்றவாறு வளர்ந்தது. அதன் பின் 240 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 11 சதவீதம் பெண்களை தலைவராக கொண்டு உள்ளது.

இது இன்றைய நிலையில் ஒட்டுமொத்த பணியாளர்களில் 36 சதவீதம் பெண்கள் உள்ளன. இதற்கே நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதில் கூடுதலாக 35 சதவீதம் அதிகமான பெண்கள் பணியில் ஈடுபடும்போது இந்தியா 35 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பணக்காரராக திகழும் என ஆய்வு கூறுகிறது.

பெண்களை சில தொழில் பிரிவுகள் சுலபமாக ஏற்றுக் கொள்கின்றன. இந்தியாவில் குறிப்பாக வங்கி மற்றும் நிதி சார்ந்த துறையில் பெண்கள் அதிகளவு மெச்ச தகுந்த பணியை மேற்கொள்கின்றனர்.

அதாவது சந்தா தோச்சார் ஐசிஐசிஐ வங்கி, ஷிகா சர்மா ஆக்ஸிஸ் வங்கி, நைனா லால் கித்வாய், ஹெச்.எஸ்.பி.சி. வங்கி, போன்றோர் நிதி சார்ந்த நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளனர்.

அது மட்டுமின்றி தொடர்ந்து ஆண்களே முதன்மையாக இருந்த துறைகளான பொறியியல், உற்பத்தி, பயோடெக் போன்றவைகளிலும் பெண்களின் பங்கு சிறந்து விளங்குகிறது. என்.ஆர்.பி. பேரிங்ஸ்யின் தலைவர் ஹர்ஷ் பீனாசவேரி, டபோ-வின் தலைவரான மல்லிகா சீனிவாசன் போன்றோர் அதற்கு உதாரணம்.

அமெரிக்க நாடுகளை ஒப்பிடும்போது ஆசிய- பசிபிக் பகுதியில் பெண்களின் பங்களிப்பு பாதி அளவுதான். அதாவது 7 சதவீதம்தான். ஆனால் அரசியல் ரீதில் எனும்போது ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பெண்கள் அரசாங்க உயர்பதவியில் உள்ளனர்.

தலைமை பணியில் உள்ள பெண்களின் எண்ணிக்கை என்பது இன்றைய நிலவரப்படி குறைவுதான். இதற்கு மிக முக்கிய காரணமாய் அமைவது, நீண்ட மற்றும் குறுகிய பணி சுமையின் காரணமாய் பணியை பாதியில் விடுவது. எனவே மேற்கத்திய நாடுகளில் உள்ளது போன்று பெண்கள் பெரிய பதவிகளில் நிறுவன கொள்கையை வளப்படுத்தும் நோக்கில் அமர்த்தப்படுவது போன்று அமர்த்த வேண்டும். அத்துடன் பெண்கள் தங்களை பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு அடுத்த தலைமுறை தம்மை ஓர் உதாரணமாய் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வெற்றியடைதல் வேண்டும்.201705251014128648 Womens role in office work SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button