உதடு பராமரிப்பு

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

223c8af7-392d-488a-b16f-f6df3a9b8699_S_secvpfலிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்களால், நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தாலும், உதட்டழகை மெருகேற்றுவதில் ‘லிப்ஸ்டிக்’ தவிர்க்க முடியாத ஒன்று. தரமான ‘லிப்ஸ்டிக்’குகளை அடையாளம் காண்பது எப்படி?

லிப்ஸ்டிக்கில், குரோமியம், காட்மியம், மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. இதை பயன்படுத்தும்போது, கடுமையான நோய்க்கு உடல் ஆளாவதோடு, உடல் உறுப்புகளும் பாதிப்படையும் என்கின்றனர். அதிகப்படியான காட்மியமானது, சிறுநீரகத்தில் படிந்தால், அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடும்.

ஒரு நாளைக்கு, பலமுறை லிப்ஸ்டிக் போட்டு வந்தால், வயிற்றில் கட்டிகள் வளரும்! பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் இருக்கும் ‘ஈயம்’, நரம்புகளின் செயல்திறனை பாதிக்கும்; தொடர்ந்து, மூளையில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு; மேலும், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும், மலட்டுத்தன்மையும் கூட ஏற்படலாம்!

இவை தவிர, ‘லிப்ஸ்டிக்’ தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல்கள், பாராபின்ஸ் மற்றும் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு உள்ளிட்டவை, நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி, இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியை தடுக்கும்! மொத்தத்தில், எவ்வளவு தரமான லிப்ஸ்டிக்காக இருந்தாலும், குறைவான உபயோகமே உடல்நலத்திற்கு நல்லது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button