நகங்கள்

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?

1ac4b950-f8c9-4c47-8b0c-6b76a667f9e3_S_secvpfநகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.
இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.

பசை, தண்­ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.
ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.
நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது.
ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே.
நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.

நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்பமாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மைதான்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கியூடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம்.
எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கியூடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button