மருத்துவ குறிப்பு

உடலளவில் ஆண், பெண் வேறுபாடு

பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு உடை, தலைமுடி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட மாறுபடுகிறது. உடலைப் பொருத்தவரை பிறப்புறுப்புகள், மார்பகம் போன்றவை முக்கியமான வித்தியாசங்கள். இவை எல்லாம் நமது பார்வைக்கு தெரியும் வெளிப்படையான வேறுபாடுகள்.

ஆனால் இவற்றையெல்லாம் விட ஆணுக்கும், பெண்ணுக்குமான உடல் வித்தியாசங்கள் ஏராளமாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் பட்டியல் போடுகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

ஆணைவிட பெண்ணின் இடுப்புப் பகுதி மிகப் பெரிதாக இருக்கும். இது குழந்தைப் பிறப்புக்காக இயற்கை ஏற்படுத்திய வடிவம். ஆணின் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர்க்கப்படுகிறது. அதனாலே ஆணுக்கு தொந்தி உருவாகிறது.

பெண்ணுக்கு இப்படி அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றில் சேமிக்கப்படுவதில்லை. அதனால்தான் பெண்களுக்கு தொந்தி இருப்பதில்லை. அப்படியென்றால் அந்த கொழுப்பு எங்கு சேர்க்கப்படுகிறது என்றால், தொடையிலும் இடுப்பின் பின்பகுதியிலும் சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஆண்களின் தொடையைவிட பெண்களின் தொடை பெரியதாக தெரிகிறது.

இதுபோக உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லின் தோற்றமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாக இருக்கும்.

இதற்கு காரணம் குரோமோசோம்கள் இடையே உள்ள வித்தியாசம் என்கிறார்கள், மருத்துவர்கள். அதேபோல் பெண்களின் ரத்தத்தில் ஆண்களின் ரத்தத்தில் உள்ளதைவிட நீரின் அளவு அதிகம் இருக்கும். இதனால் பெண்களுக்கு 20 சதவீத சிவப்பணுக்கள் குறைவாகவே இருக்கும். பெண்கள் அடிக்கடி ரத்தச்சோகை பாதிப்புக்கு ஆளாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன. அது குறையும் போது ஆக்சிஜனும் குறைகிறது.

இந்த காரணத்தினால் தான் வெப்பம் மிகுந்த இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் பெண்கள் மயங்கி விழுகிறார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு நுரையீரல் சிறியதாகவே இருக்கும். பெண் நுரையீரலைவிட ஆணின் நுரையீரல் 30 சதவீதம் பெரியதாக இருக்கும். அதனால் நுரையீரல் கொள்ளளவும் அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்களிலும் திருவிழா கூட்டத்திலும் பெண்கள் சோர்ந்து போவதற்கு இதுதான் காரணம்.

உற்சாகம் என்ற விஷயத்தில் பெண்கள், ஆண்களை விஞ்சி நிற்கிறார்கள்.

இந்த உற்சாகத்திற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் தனி ஹார்மோனின் சக்திதான் என்கிறார்கள். நோய் என்று எடுத்துக் கொண்டாலும் கூட பெண்களை விட ஆண்களே அதிகம் மரணமடைகிறார்கள். மார்பக புற்றுநோய், பெண்ணின் பிறப்புறுப்பு நோய், கர்ப்பப்பை கட்டி போன்ற நோய்களைத் தவிர மற்ற அனைத்து நோய்களும் ஆண்களுக்கே வருகின்றன.

வெயிலை அதிகமாக பெண்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆண்கள் அதிகமான வெயிலில் சோர்ந்து போய்விடுவார்கள்.

இதற்கு காரணம் பெண்களின் உடலில் உள்ள வளர்சிதை மாற்றம்தான். வயிறு, கல்லீரல், குடல்வால் போன்ற உறுப்புகள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரியதாக இருக்கும். முரட்டுத்தனம் என்பதை எடுத்துக் கொண்டால் ஆண்களின் முரட்டுத்தனம் பெண்களைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

ஆண்களைவிட பெண்களின் இதயம் எப்போதும் வேகமாகத் துடிக்கும்.

சராசரியாக ஆண்களுக்கு நிமிடத்திற்கு 72 முறை இதயம் துடிக்கிறது என்றால் பெண்களுக்கு 80 முறை துடிக்கிறது. ஆண்களின் பற்களைவிட பெண்களுக்கு பற்கள் விரைவாகவே விழுந்துவிடும். பொக்கைவாய் தாத்தாக்களைவிட, பொக்கைவாய் பாட்டிகளே அதிகம்.

ஆணைவிட பெண்ணுக்கு தலை, தண்டுவடம், கால்கள் முதலியவை மிகச் சிறியவை. இப்படி பல விஷயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாகவே இருக்கின்றன.
1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button